பிக்பாஸ் 5 - நமீதா வெளியேற இது தான் உண்மையான காரணம்..! - வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!


'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில், திருநங்கை நமிதா மாரிமுத்து செய்த களேபரத்தால், அவர் வெளியேற்றப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பாகி வரும், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியை, நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். 
 
இந்த முறை பெண்கள் அதிகளவில் பங்கேற்க, திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பங்கேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன், தன் திருநங்கை வாழ்க்கை குறித்து நமிதா பேசியது, அனைவரது பாராட்டையும், அனுதாபத்தையும் பெற்றது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பங்கேற்ற நமிதா மாரிமுத்துவின் கதையை கேட்டால் கல் நெஞ்சமும் கரையும் அளவுக்கு அத்தனை சோகங்கள் இருந்தன.
 
இதனால் அவருக்கு ஒரே நாளில் ரசிகர்கள் உயர்ந்து அவரே பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என சப்போர்ட் செய்தனர். இதன் தாக்கம் குறைவதற்குள், சக போட்டியாளர் தாமரைச் செல்விக்கும் நமிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை பெரிதானது. 
 
வீட்டில் இருந்த பொருட்களை துாக்கியெறிந்து, நமிதா ரகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமீதாவை, பிக்பாஸ் அணி சமாதானப்படுத்த முயற்சித்தது. 
 
அது, பலனளிக்காத நிலையில், 'ரெட் கார்டு' தரப்பட்டு, நமிதா வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில், தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா, அவராகவே வெளியேறியதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

பிக்பாஸ் 5 - நமீதா வெளியேற இது தான் உண்மையான காரணம்..! - வெளியான திடுக்கிடும் தகவல்கள்..! பிக்பாஸ் 5 - நமீதா வெளியேற இது தான் உண்மையான காரணம்..! - வெளியான திடுக்கிடும் தகவல்கள்..! Reviewed by Tamizhakam on October 10, 2021 Rating: 5
Powered by Blogger.