சரண்யா செய்தியாளராக அறிமுகமாகி தன்னுடைய தமிழ்பேசும் திறமையினாலும் அழகான உச்சரிப்பினாலும் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் வலம் வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலமாக கதாநாயகியாக சீரியலில் காலடி எடுத்து வைத்தார்.
இந்த சீரியலில் இவர் தைரியமிக்க துணிச்சலான பெண்ணாக நடித்து இருந்தாலும் இவருடைய க்யூட்டான நடிப்பையும் அழகான சேட்டைகளையும் ரசித்தனர்.
ரசித்த ரசிகர்கள் இவர் மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என அதிகமாக எதிர்பார்த்து வந்தனர். ஆனால் முதல் சீரியல் திடீரென முடிக்கப்பட்டதும் அடுத்த சீரியலில் உடனே கமிட்டாகி விட்டார் .
ஆயுத எழுத்து சீரியல் கலெக்டராக நடித்துக் கொண்டிருந்த இவர் பல பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை தன்னுடைய நடிப்பில் கொண்டு வந்திருந்தார் .
பாதியில் வந்தாலும் கலக்கல் இந்த சீரியலில் இவருக்கு முன்பு வேறு நடிகை நடித்து இருந்தாலும் இவர் பாதியிலேயே நடிக்க ஆரம்பித்தாலும் இவருடைய நடிப்பை ரசிகர்கள் நன்றாக ரசித்து வந்தனர். ஆனால் இந்த சீரியலும் திடீரென முடிக்கப்பட்டு விட்டது .
அதற்குப் பிறகு இவரை எந்த சீரியலும் காணாத ரசிகர்களுக்கு அடிக்கடி இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக தரிசனத்தைக் காட்டி வருகிறார். சீரியல்கள் தன் கைவசம் இல்லாவிட்டாலும் டப்ஸ்மாஷ் வீடியோக்களில் கலக்கிகொண்டு இருக்கும் இவர் மாடலிங்கிலும் பின்னி பெடல் எடுத்து வருகிறார் .
பல விளம்பரங்களுக்கு மாடலாக நடித்து கொண்டிருக்கும் இவர் ஃப்ரீ டைமில் அடிக்கடி போட்டோ சூட்டும் நடத்திக் கொண்டிருக்கிறார் .அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடவும் இவருடைய ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.
இந்நிலையில், தற்போது லாவ்ண்டர் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டஸ்க்கி கட்ட.. ஒரு நிமிஷம் அஞ்சலின்னு நெனச்சிட்டோம்.. என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Tags
Sharanya turadi