"ரெக்க மட்டும் இருந்தா தேவதை டா.." - வைரலாகும் "அப்பா" யுவஸ்ரீ புகைப்படங்கள்..! - உருகும் ரசிகர்கள்..!

 
சமுத்திரக்கனி நடித்த 'அப்பா', அமலாபால் நடித்த 'அம்மா கணக்கு' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவஸ்ரீ தற்போது நன்கு வளர்ந்து, அசப்பில் ஹீரோயின் லுக்கு மாறியுள்ளார். 
 
இயக்குனர் அஸ்வின் ஐயர் திவாரி இயக்கக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'அம்மா கணக்கு' படத்தில்.... தற்போது கவர்ச்சியில் கிறங்கடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான, அமலா பாலுக்கு மகளாக நடித்தவர் யுவஸ்ரீ.
 
 
இவரது எதார்த்தமான நடிப்பு, கியூட் புன்னகை போன்றவை இவருக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பல வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது. தொடர்ந்தும் அப்பா, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார்.


நடிப்பு மீது ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் சுட்டியான யுவஸ்ரீ தற்போது படிப்புக்காக சில காலம் திரையுலகை விட்டு விலகியே உள்ளார்.எனினும் அவ்வப்போது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 

 
இங்க பாருங்க சும்மா நெடுநெடுனு வளர்ந்து அழகு தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை. இதனை பார்த்த ரசிகர்கள், ரெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதை டா என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post