இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் சீரியல் நடிகை ராணி...!

 
சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகை ராணி. அழகிய கண்கள், நல்ல உடற்கட்டு, கம்பீர குரல் வளம் என்று அத்தனை தகுதிகளும் உள்ள நடிகை இவர். இவர் சன் டிவியில் சீரியல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். 
 
அப்போது சீரியல்களில் வில்லி என்றால் அவர்களுக்கு ரோல் மாடல் என்று யாரும் கிடையாது. தாங்களே ஒரு வில்லி மாடல் வைத்து நடித்தால் மட்டும் உண்டு.அப்படி நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராணி. 
 
இவர் பேசி நடிக்கும் பாணியை பல நடிகைகளும் தங்களது வில்லி வேடங்களுக்கு பின்பற்றினார்கள். கவிதாலயா தயாரிப்பில் இரவு பிரைம் டைம் சீரியலாக அப்போது ஒளிபரப்பான அலை சீரியலில் வில்லியாக தடம் பதித்தவர் ராணி. அப்போது ஆரம்பித்த இவரின் பயணம் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி என்று தொடர்கிறது. 
 
வில்லி தோற்றத்தில் புதிய அத்தியாயத்தையே உருவாக்கியவர் ராணி.ராணியை வெறும் ராணி என்று ஒரு நாளும் யாரும் குறிப்பிட்டதில்லை..முதலில் அலை ராணி என்று குறிப்பிட்டார்கள். அடுத்து சொந்தம் ராணி என்று குறிப்பிட்டார்கள். 
 
 
இதற்கும் அடுத்து அத்திப் பூக்கள் ராணி என்று குறிப்பிட்டு வந்தார்கள்.இப்போது வள்ளி ராணி என்று அழைக்கிறார்கள். இப்படி தனக்கென ஒரு வில்லி பணியை வைத்துக் கொண்டு இவர் மிரட்டுவதும்,பேசுவதும், இவரின் பாடி லாங்குவேஜும் அனைவரையும் கவர்ந்து இழுத்து, இன்னும் அதே தோற்றத்தில் நடித்து வருகிறார்..திருமுருகனின் குல தெய்வம் சீரியலில் நல்ல குடும்பத்து பெண்மணியாக நடித்தார். 
 
 
இந்த வேடத்திலும் அவர் நன்றாகவே நடித்தார் என்றாலும், அவருக்கு அது பொருத்தமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும் இதை ஒரு சவாலாக ஏற்று நடிப்பதாகத்தான் ராணி கூறினார்.இப்போது சன் டிவியின் மூன்று சீரியல்களில் நடித்து வருகிறார்.


பாண்டவர் இல்லம் சீரியலில் வேதநாயகி கதாபாத்திரம், ரோஜா சீரியலில் சந்திரகாந்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம். வள்ளி சீரியலில் இந்திர சேனா கதாபாத்திரம் என்று நடித்து வெளுத்து வாங்குகிறார்.
 
 
தனக்கு நீண்ட தலை முடி இருந்ததாகவும், அலை சீரியலுக்காக குட்டை முடியாக வெட்டிக் கொண்டதும் , கே,பி சார் நன்றாக இருக்கிறது என்று புகழ்ந்ததையும் கூறும் ராணி, இன்றுவரை அதனால் முடியை வளர்க்க வேண்டும் என்று எண்ணியதில்லை என்றும் கூறுகிறார்.

Post a Comment

Previous Post Next Post