தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.
சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.
மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினார் அது தற்பொழுது உண்மையாக்கிவிட்டார்.
இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார் சரண்யா.
எப்போதுமே போல்டான ரோல்களில் நடிப்பதையே விரும்புகிறாராம் சரண்யா. என்னால் எப்போதும் அழுது வடியும் பெண்ணாக நடிக்க முடியாதுங்க. எல்லாத்தையும் தியாகம் செய்யும் பெண்ணாகவும் நடிக்க முடியாதுங்க. இப்போதைய பெண்கள் எல்லாம் ரொம்ப ஸ்டிராங்.
டிவியில் வருவதை வச்சு யாரும் பெண்களை ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லிச் சிரிக்கிறார் சரண்யா. இந்நிலையில், வித்தியாசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா ட்ரெஸ் இது..? என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார்கள்.
0 கருத்துகள்