"காட்டு தேக்கு... அக்மார்க் நாட்டுக்கட்ட..." - கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் சீரியல் நடிகை ஸ்யமந்தா..!

 
கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷியாமந்தா கிரண். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டிருந்தவர்.
 
சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்படுவது சகஜமாக நடக்கும் ஒன்று தான். அவருக்கு பதில் இவர் என ஒரு வரியை மட்டும் போட்டுவிட்டு சீரியலை தொடர்வார்கள். நாளடைவில் ரசிகர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். 
 
அதனால் தான் தமிழ் சின்னத்திரையில் அடிக்கடி இதுபோன்று நடப்பதை பார்க்க முடிகிறது.அந்த வரிசையில் தற்போது சன் டிவியின் நிலா சீரியலில் அஞ்சலி என்ற ரோலில் நடித்து வந்த சியமந்தா கிரண் அதில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். 
 
அவர் இன்ஸ்டாக்ராமில் சில புகைப்படங்களை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறார். "அஞ்சலியை மிஸ் செய்கிறார்கள். இந்த புகைப்படங்கள் ஏற்கனவே பழைய நினைவுகளாக மாறிவிட்டது. 
 
நிலா சீரியலில் ஒரு பங்காக இருந்தது ஒரு சிறந்த அனுபவம். எனக்கு வழங்கப்பட்ட சவாலான ரோலில் நான் சிறப்பாக நடித்தேன். அதற்காக நான் குழுவுக்கு நன்றி கூறி கொள்கிறேன்." "அந்த சீரியலில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த சன் டிவிக்கு நன்றி" என பதிவிட்டிருந்தார் சியமந்தா.
 
 
தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்ட அவர் நாம் சிறு வயதில் இருந்து உட்கொள்ளும் உணவுகள்தான் நம்முடைய ஆரோக்கியமான சருமத்திற்கும் கூந்தலுக்கும் காரணமாக அமையும். 


எனக்கு பிட்சா, பர்கர் போன்ற உணவு வகைகள் எல்லாம் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தான் சாப்பிட்டேன். அதுவரையிலும் வீட்டு உணவுகள் மட்டும்தான். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், நெகுநெகுவென இருக்கும் தனது அழகை புடவை சகிதமாக படம்பிடித்து காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், "காட்டு தேக்கு... அக்மார்க் நாட்டுக்கட்ட...செம்ம ஹாட்.. ரொம்ப அழகா இருக்கீங்க.." என்று வர்ணித்து வருகின்றனர்.