முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை பூர்ணா..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. 
 
நடிகர் விஜய் கூட பூர்ணாவை அசினும், ரேவதியும் கலந்த கலவை என கூறினார். இதனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் பூர்ணா. 
 
தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தரமான படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பை அளித்து வருகிறார் நடிகை பூர்ணா. 
 
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 இப்பொழுது தெலுங்கில் தடபுடலாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படம் பேசும், பிசாசு 2 ,அம்மாயி உள்ளிட்ட படங்களை தமிழில் கைவசம் வைத்திருக்கும் பூர்ணா இப்பொழுது வெப் சீரிஸ் பக்கமும் தலை சாய்த்துள்ளார். 
 
 
முன்னணி நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் நடித்து வரும் நிலையில், தற்போது பூர்ணாவும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ட்ரசர் ஹன்ட் ஜானரில் உருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார் அம்மணி.
 


மேலும், முதன் முறையாக நீச்சல் உடையில் இந்த வெப்சீரிஸில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. இதனை அறிந்த ரசிகர்கள், ஏக்கத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை பூர்ணா..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை பூர்ணா..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 12, 2021 Rating: 5
Powered by Blogger.