சீரியல்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த சரண்யா துரோடி புது சீரியல்கள் கைவசம் இல்லாமல் ஃப்ரியாக இருந்தார்.
சரண்யா செய்தியாளராக அறிமுகமாகி தன்னுடைய தமிழ்பேசும் திறமையினாலும் அழகான உச்சரிப்பினாலும் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் வலம் வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலமாக கதாநாயகியாக சீரியலில் காலடி எடுத்து வைத்தார்.
இந்த சீரியலில் இவர் தைரியமிக்க துணிச்சலான பெண்ணாக நடித்து இருந்தாலும் இவருடைய க்யூட்டான நடிப்பையும் அழகான சேட்டைகளையும் ரசித்தனர்.
இந்நிலையில், விஜய் டிவியின் புதிய சீரியலில் பிரஜினும், சரண்யா துராடியும் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து ரசிகர்கள் 'இனி இவங்க தான் டிரெண்டிங் ஜோடி' என சோஷியல் மீடியாவை கலங்கடித்து வருகின்றனர்.
பிரபல நடிகர்களான பிரஜின் மற்றும் சரண்யா துராடி எப்போது மீண்டும் சின்னத்திரையில் நடிப்பார்கள் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் 'வைதேகி காத்திருந்தால்' என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்ப தயாராகி வருகிறது.
இதில் பிரஜின் நாயகனாகவும், சரண்யா துராடி நாயகியாகவும் நடிக்கின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் தொடரில் நடித்து ரசிகர்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற இந்த இரு பிரபலங்களும் ஒரே சீரியலில் இணைந்து நடிக்கப்போவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இயக்குனரான சிவசேகர் தான் இந்த சீரியலையும் இயக்கவுள்ளார். எனவே, இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு பெருகி வருகிறது.
இந்த தொடர் குறித்த கூடுதல் தகவல்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இறுக்கமான டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு, பின்னழகு என அம்புட்டு அழகையும் எடுப்பாக காட்டி சுடச்சுட பரிமாறியுள்ளார் அம்மணி.
0 கருத்துகள்