இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவரசா ஆந்தாலஜி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்திருந்தார்.
தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு அடுத்ததாக சுந்தரி வெளியாக உள்ளது இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி கச்சிதமாக நடித்து கொடுக்கும் நடிகை பூர்ணாவுக்கு தென்னிந்திய சினிமா இதுவரை சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை.
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தீ ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளம் நபருக்கு முத்தம் கொடுத்து, அவரது கன்னத்தை கடித்தது.. பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், கடற்கரையில் தொப்பலாக நனைந்த உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.
Tags
Poorna