தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓயே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தெலுங்கு வரிசையாக கிடைத்த பட வாய்ப்புக்களால் பிஸியாகி விட்டார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள ஈஷா, ஒட்டு, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒட்டு படம் மலையாளத்திலும் வெளியாக உள்ளதாக மலையாளத்திலும் என்ட்ரி ஆகிறார்.2018 ல் தெலுங்கில் இவர் நடித்த 4 நடங்களும் ஹிட் ஆனது.
அத்துடன் ஈஷாவின் நடிப்பு பாராட்டு, விமர்சனங்கள் என அனைத்தையும் பெற்றதால் இவர் பிரபலமாகி விட்டார்.தற்போது ஒட்டு படத்திற்காக வில் வித்தை, கிக் பாக்ஸிங் போன்றவற்றை பயின்று வருகிறார் ஈஷா.
ஈஷா முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமான அந்தக முண்டு ஆ தர்வதா என்ற படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.
இந்த படம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. முதல் படமே ஹிட் படம் ஆகி விட்டதால் ஈஷாவிற்கு மவுசு கூடியது.
தற்போது ஆயிரம் ஜென்மங்கள், ஒட்டு போன்ற படங்களில் நடித்து வரும் அவர் தனது கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து தண்ணீருக்குள் நின்றபடி தன்னைச்சுற்றி பூக்களை தூவியபடி போஸ் கொடுக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஈஷா ரெப்பா. அந்த போட்டோக்களை வைரலாகி வருகின்றன.
Tags
Eesha Rebba