சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்போது பார்க்க முடிகிறது. இந்த புலம்பலங்களுக்கு காரணம் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். பல பேர் ஹரிஜாவை சென்னை பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. ஹரிஜா பக்கா கோயம்புத்தூர் பொண்ணு.
அவரின் அப்பா பிஸ்னஸ் பண்ணுறாரு. அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஹெட்டாக இருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன் இருக்கார். சின்ன வயசிலயிருந்து மீடியா மேல ஆர்வம் இருந்ததால் விஸ்காம் பண்ணினார் ஹரிஜா.
இவருக்கு திருமணத்துக்கு முன் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருந்தது… ஆனால் என்ன காரணத்தினாலோ சில படங்களில் அவர் நடிக்கவில்லை.
இவர், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் “திருவிளையாடல்” என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.பார்ப்பதற்கு இவரே குழந்தை போல துருதுருவென்று இருப்பார்.