"F**k தாலிபான்ஸ்..." - தலைக்கேறிய போதையில் நடிகை பூர்ணா..! - தீயாய் பரவும் வீடியோ..!


தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு அடுத்ததாக 3 ரோசஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 
 
இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது.எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி கச்சிதமாக நடித்து கொடுக்கும் நடிகை பூர்ணாவுக்கு தென்னிந்திய சினிமா இதுவரை சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை. 
 
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
 
அதைத்தொடர்ந்து நடித்த கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி என, அடுத்தடுத்து வெளியான படங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க தமிழ் சினிமாவின் பக்கம் எட்டி பார்க்காமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் வந்து கவர்ச்சி காட்டி நடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
அந்த வகையில் கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் சிறிய வேடத்தில் வந்து சென்றார். இந்நிலையில், நடிகைகள் ஈஷா ரெப்பா, பாயல் ராஜ்புட் என்ற இரண்டு ரோஜாக்களுடன், மூன்றாவது ரோஜாவாக பூர்ணா நடித்துள்ள "3 ரோசஸ்" திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
திருமணத்தை வெறுக்கும் மூன்று தோழிகள் குறித்த வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாக வுள்ளது. 
 
இந்த டீசரின் இறுதியில், குடி போதையில் நடிகை ஈஷா ரெப்பா F**k தி இந்தியன் பேரண்டிங்.. F**k தி சொசைட்டி.. F**k தி மேரேஜ் சிஸ்டம்.. என்று கூற.. தலைக்கேறிய போதையில் F**k தாலிபான்ஸ்...என்று உளரும் பூர்ணாவின் காட்சிகள் செம்ம ஃபன்னாக உள்ளது. இதோ, அந்த டீசர்..
 

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--