நடிகை சங்கீதா ஆரம்பத்தில் ரசிகா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தார். 1998ம் ஆண்டு “சம்மர் இன் பெத்லஹம்” என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தமிழ் படங்களில் இரண்டாம் கதாநாயகியாக காத்லே நிம்மதி, டபுள்ஸ் போன்ற படங்களில் நடிததார்.
2001ம் வருடம் பாண்டியராஜனுடன் கபடி கபடி என்ற படத்தில் கதாநாயகியாய் வாய்ப்பு கிடைத்தது. சங்கீதா ( ரசிகா ) படு கவர்ச்சியாய் அதில் நடித்தார். 2002 ல் கட்கம் என்ற தெலுங்கு படத்தில் அவரின் நடிப்புத் திறன் எல்லாருக்கும் தெரிந்தது. அதற்காக ஃபில்ம் ஃபேர் அவார்ட் பெற்றார்.
2003ல் பிதாமகன் என்ற பாலா இயக்கிய படத்தில் சங்கீதாவின் நடிப்புக்கு ஃபில்ம்ஃபேர் விருதும் தமிழ்நாடு ஸ்டேட் அவார்டும் பெற்றார். ஆனால் அதில் அவ்வளவு சிறப்பாக நடித்தும் சங்கீதாவுக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. அதனால்தானோ என்னவோ சங்கீதா சில சென்சேஷனல் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அவர் 2006ல் உயிர் என்ற படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்தார். அதில் கொழுந்தன் மீது ஆசை கொள்ளும் அண்ணியாக நடித்தார். அதிலிருந்து இமேஜ் பார்க்காமல் இது போன்ற ஒரு ரோலில் நடித்த சங்கீதாவின் மீது மீண்டும் தமிழ் சினிமாவின் கவனம் விழந்தது.
2008ல் தனம் என்ற படத்தில் மீண்டும் சென்சேஷன் கிளப்பினார் சங்கீதா… இதில் தாசியாக நடித்தார்.. ஆக மற்ற நடிகைகள் ஏற்க தயங்குகிற கேரக்டர் நெகடிவ்வாக நடிக்கத் தயாராக இருக்கும் ஒரு சென்சேஷனல் நடிகையாகத் தான் சங்கீதா பார்க்கப்பட்டு வந்தார்… ஆனால் 2010ல் வந்த கமல் படமான மனமதன் அம்பில் சங்கீதா காமெடியில் தூள் கிளப்பியிருக்கிறார்.
மேலும் பல காட்சிகளில் அவரின் மெருகேற்றிய நடிப்பால் சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்டாக தன்னை முன்னிறுத்தியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், இளம் வயதில் வெறும் துண்டை கட்டிக்கொண்டு காலை தூக்கி வைத்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Tags
sangeetha