ஓவர் டைட்டான உடையில்.. கிளாமர் காட்டும் VJ மணிமேகலை..! - வைரல் போட்டோஸ்..!

 
பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் மணிமேகலை. அதற்கு பிறகு அவர் விஜய் டிவிக்கு வந்து தொகுப்பாளர் மட்டுமின்றி காமெடியனாகவும் மாறிவிட்டார். குக் வித் கோமாளியில் பங்கேற்ற அவர் ரசிகர்களை காமெடியால் விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறார். 
 
விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனிலும் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அவர் ரக்ஷன் உடன் தொகுப்பாளராகவும் வர வாய்ப்பு இருக்கிறது.
 
கடந்த வினாயகர் சதுர்த்தி அன்று தான் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் ஆகியோர் புது பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருந்தனர். இது அவர்களது வாழ்நாள் கனவு என்றும் அதனை சொந்த உழைப்பில் வாங்கி இருப்பதாகவும் பூரிப்புடன் தெரிவித்திருந்தனர். 
 
அதற்காக அவர்களுக்கு அதிகம் வாழ்த்துக்களும் குவிந்தது. சொகுசு கார் வைத்திருக்கும் பிரபலங்கள் லிஸ்டில் மணிமேகலையும் இணைந்தது பற்றி வீடியோவும் அவர்கள் வெளியிட்டு இருந்தனர். அது இணையத்தில் வைரல் ஆனது.இதைதொடர்ந்து புது கார் வாங்கிய இரண்டாவது நாளே அவர்கள் விபத்தில் சிக்கி இருக்கின்றனர். 
 
 
ஆனால் அது புது காரில் அல்ல, அவர்களில் ஏற்கனவே வைத்திருந்த பழைய காரை எடுத்துக்கொண்டு ஒரு ட்ரிப் சென்றிருக்கின்றனர். அப்போது தான் அந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மணிமேகலை தான் அப்போது கார் ஓட்டிச் சென்றிருக்கிறார். 
 
 
ஒரு லாரியின் மீது கார் மோத முன்பக்கம் டேமேஜ் ஆகி இருக்கிறது. இப்படி ஆகிவிட்டதே என வருத்தமாக ஹுசைன் இருக்க, மணிமேகலை கூலாக அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் vlog வெளியிட்டிருக்கிறார். 

 
மேலும், டைட்டான மினுமினுக்கும் கவர்ச்சி உடையில் நிகழ்ச்சி ஒன்றின் ஷூட்டிங் செட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.