2023 டாப் 5 இயக்குனர்கள்.! முதலிடம் யாரு தெரியுமா..?

2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நம்மை தயார்படுத்திக் கொண்டு வருகின்ற வேளையில், 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக அளவு வசூலில் சாதனை செய்த திரைப்படங்களை இயக்கிய டாப் 5 இயக்குனர்கள் யார்? யார்? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

இதில் முதலாவதாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா நடித்து இருந்தார்கள். இந்தப் படமானது சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் 100 கோடி வரை வசூலில் சாதனை புரிந்தது. மேலும் விஷாலுக்கு ஒரு கம்பேர் படமாக அமைந்தது என கூறலாம். 

மேலும் இந்த படத்தில் இயக்குனர் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை ரீ கிரியேட் செய்த விதம், ரெட்ரோ பாடல்களை பயன்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தோடு இணைந்து வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அடுத்து இவருக்கு இந்த ஆண்டு சிறந்த இயக்குனர்களின் வரிசையில் நான்காவது இடம் கிடைத்து உள்ளது.

கடந்த ஆண்டு நம்பர் ஒன் இடத்தில் இருந்த மணிரத்தினம் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இரண்டு பாகங்களில் வெளியிட்டு 500 கோடி ரூபாய் வசூலை அள்ளினார்.

--Advertisement--

இந்த ஆண்டும் இவர் முதல் இடத்தை பிடிப்பார் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. எனவே கண்டிப்பாக தக் லைஃப் படத்தில் தன் திறமையை மீண்டும் நிரூபித்து தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த லியோ திரைப்படத்தின் மூலம் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த இயக்குனர் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு லியோ படத்தை தரவில்லை என்ற கலவை ரீதியான விமர்சனங்கள் நிலவி வருகிறது.

ஹாலிவுட் அளவிற்கு ஹைனா சீன் அமைந்திருந்தது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய அளவு தலைவர் 170 படத்தில் இவர் தரமான சம்பவத்தை செய்வார் என்று அனைவரும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்போதும் முதல் இடத்தை பிடித்திருக்கும் அந்த இயக்குனர் யார் என்பதை நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நினைப்பது சரி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தான் அந்த அதிர்ஷ்டசாலி. ஜெயிலர் திரைப்படத்தில் தரமான சம்பவத்தை செய்து தன்னை ஒரு மாஸ் இயக்குனராக இவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து பேவரைட் ஹாலிவுட் ஹீரோவாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நெல்சனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இப்போது இந்த ஆண்டின் சிறந்த ஐந்து இயக்குனர்கள் யார் என்ற விவரம் உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.