உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை காரணமாக உக்ரைன் மீதான தாக்குதலை விரைவில் ரஷ்யா நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
அதோடு இல்லாமல்.. அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதெல்லாம் நல்ல விஷயம்தானே.. இதனால் என்ன சிக்கல் என்றால்.. இந்த நல்லதில் ஒரு கெட்டது உள்ளது. அது தங்கம் விலை உயர்வு.. ஆம்.. இதன் காரணமாக தங்கம் விலை உயரும்.. எப்படி என்று பார்க்கலாம்..
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு இந்திய நேரப்படி இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.
வெளியே நல்லது போல தோன்றினாலும்.. இந்த விவகாரத்தில் நேட்டோ நாடுகளை டிரம்ப் பகைத்து உள்ளார். ஐரோப்பா நாடுகளை டிரம்ப் கடுமையாக பகைத்து உள்ளார். டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது.
ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை.
முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.
வரும் நாட்களில் டிரம்பிற்கு எதிராக ஐரோப்பா முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக அவருக்கு எதிராக கண்டங்களை தெரிவிக்கலாம்.
இங்குதான் நிலைமை சிக்கலாகிறது. ஏற்கனவே கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் மீதே டிரம்ப் வரிகளை அதிகரித்துள்ளனர். அடுத்து ஐரோப்பிய நாடுகள் மீது வர்த்தக போரை தொடுக்க திட்டமிட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் டிரம்பிற்கு எதிராக ஐரோப்பா முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் வர்த்தக போர் தீவிரம் அடையும் . உக்ரைன் - ரஷ்யா போர் முடிந்தாலும்.. வர்த்தக போர் தீவிரம் அடையும் . இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது என்னவோ தங்கத்தை பொதுவாக வாங்கி குவிக்கும் மேற்கு உலக நாடுகள்.
சரி இதனால் எப்படி தங்கம் உயரும் என்று நீங்கள் கேட்கலாம்.. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவுகள் காரணமாக தங்கத்தின் விலை மேலும் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 7,940 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 8,662 (1 கிராம்) ஆகவும் உள்ளது.
உலகம் முழுக்க வர்த்தக போரை தொடங்கி உள்ளார் டிரம்ப். எதிரி நாடுகளை விட நட்பு நாடுகள் மீதுதான் டிரம்ப் வர்த்தக போரை ஏவி விட்டுள்ளார். வர்த்தக போர் காரணமாக.. உலகம் முழுக்க பணத்தின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். தங்கம் பக்கமே தனி நபர்கள், அமைப்புகள், ஏன் நாடுகள் கூட செல்லும்.
பொதுவாக வர்த்தக போர் சமயத்தில்.. உலகம் முழுக்க பங்குச்சந்தை சரமாரியாக சரியும். இந்தியாவிலும் அதேதான் நடக்கிறது. ஆனால் தங்கம்தான் ரியல் பணம் என்பதால்.. அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். அதன் மதிப்பு வலுவாக இருக்கும். இதனால் அடுத்த சில வருடங்களுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கும்.
தங்கம் விலை உயர்வதற்கான காரணங்கள்:
- அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தை: உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால், அது உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை குறைக்கும். இது முதலீட்டாளர்களை தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டும்.
- வர்த்தக போர்: டிரம்ப் தனது வர்த்தக கொள்கைகளால் உலக நாடுகளுடன் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இது பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கிறது மற்றும் தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.
- பங்குச்சந்தை சரிவு: வர்த்தக போர் காரணமாக பங்குச்சந்தை சரியும் வாய்ப்புள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
உக்ரைன் போர் முடிவு மற்றும் வர்த்தக போர் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.