Posts

Showing posts with the label today gold rate

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் அமெரிக்க.. ஆப்பு வைக்க போகும் தங்கம் விலை..

Image
உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை காரணமாக உக்ரைன் மீதான தாக்குதலை விரைவில் ரஷ்யா நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன.  அதோடு இல்லாமல்.. அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதெல்லாம் நல்ல விஷயம்தானே.. இதனால் என்ன சிக்கல் என்றால்.. இந்த நல்லதில் ஒரு கெட்டது உள்ளது. அது தங்கம் விலை உயர்வு.. ஆம்.. இதன் காரணமாக தங்கம் விலை உயரும்.. எப்படி என்று பார்க்கலாம்..     மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு இந்திய நேரப்படி இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க ...