Dragon படம் குறித்து ஒரு வார்த்தை சொன்ன சிம்பு..! பத்தி எரியும் இண்டர்நெட்..!

 
'லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு, நடிகர் பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து ஒரு படத்தில் நடித்துள்ளார். 
 
'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். 
 
 
அனுபாமா பரம்ஸ்வரன், கயது லோகர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
இந்த நிலையில், 'டிராகன்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சிம்புவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அஸ்வத். 
 
 
இது சிம்புவின் கரியரில் 51-வது திரைப்படம். இப்படத்தின் மூலம் சிம்புவின் நெருங்கிய வட்டத்திற்குள் இடம்பிடித்துவிட்டார் அஸ்வத் மாரிமுத்து. 'டிராகன்' திரைப்படத்தில் 'ஏண்டி விட்டுப்போன' பாடலை சிம்பு பாடியிருந்தார். 
 
'டிராகன்' திரைப்படத்தைப் பார்த்த சிம்பு, படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். "ப்ளாக்பஸ்டர்" என ஒரே வரியில் படம் குறித்துக் கூறியுள்ளார் சிம்பு. சிம்புவின் விமர்சனத்துக்கு நன்றி தெரிவித்து அஸ்வத் மாரிமுத்து, "நன்றி சார். 


படம் பார்த்துவிட்டு நீங்கள் சொன்ன வார்த்தைகளை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். அந்த வார்த்தைகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அடுத்தது உங்களின் 51-வது படம்" எனப் பதிவிட்டுள்ளார். 
 
சிம்புவின் இந்த பாராட்டு அஸ்வத் மாரிமுத்துவுக்கு உற்சாகத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிம்பு - அஸ்வத் மாரிமுத்து கூட்டணி 'டிராகன்' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.