பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் தமிழை சுத்தமாக பேசக்கூடியவர் நடிகை சரிதா. விஜயசாந்தி, ராதா, அம்பிகா, நதியா என எல்லாருக்குமே சரிதாதான் டப்பிங் தந்தார்.
அதிலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று விஜயகாந்தி கொண்டாடப்பட்டதற்கு சரிதாவின் குரலுக்கும் ஒரு முக்கிய பங்கும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு நெகிழ்ந்து கூறியுள்ளார்.
Aagayam Tamil சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்த செய்யாறு பாலு, நடிகை சரிதாவின் நடிப்புத்திறமை பற்றி பகிர்ந்துள்ளார். 80களில் சிவப்பாகவும், நல்ல உயரத்துடன் மட்டுமே கதாநாயகன், கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனை முதலில் உடைத்ததே ரஜினிதான்.
அதே வரிசையில் சரிதா உள்ளே இறங்கி, நடிப்பில் ஒரு அதகளமே செய்தார். நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய மாபெரும் நடிகை சரிதா என்று கூறியுள்ளார். 1960-ல் குண்டூரில் சாதாரண கிராமத்தில் பிறந்தவர் சரிதா. இவரது உண்மையான பெயர் அபிலாஷா. 15 வயதில் பள்ளிப்படிப்பு படிக்கும்போதே மரோசரித்ரா படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது.
பாலச்சந்தர் படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கருப்பாக, குள்ளமாக, பெரிய கண்களுடன் கதாநாயகி வேண்டும் என்று பாலச்சந்தர் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு வீட்டின் கல்யாண ஆல்பத்தில் சரிதாவின் போட்டோவை பார்த்துள்ளார். இப்படித்தான் சரிதா சினிமாவுக்குள் நடிக்க வந்தார். இதற்கு பிறகு, நிறைய வாய்ப்புகள் சரிதாவுக்கு வர ஆரம்பித்தது.
ஆனால், 15 வயது முடியும்போதே சரிதாவுக்கு வெங்கட சுப்பையா என்ற தெலுங்கு நடிகருடன் திருமணம் நடந்தது. ஆனால், 6 மாத காலத்திலேயே, மனக்கசப்பு காரணமாக அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. பாலச்சந்தரின் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். நல்ல நல்ல படங்கள் சரிதாவுக்கு தென்னிந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகினார்கள்.
"களிமண்ணாக இருந்த என்னை நடிகையாக மாற்றியது பாலச்சந்தர் சார்தான், அவர் என்னை திட்டி திட்டி நடிப்பை கொண்டு வந்ததால்தான், என்னால் இப்படியெல்லாம் நடிக்க முடிந்தது" என்று பலமுறை சரிதா சொல்லியிருக்கிறார். பாக்யராஜ் ஒருமுறை சொல்லும்போது, "மெளன கீதங்கள் படத்தில் உசுர கொடுத்து டயலாக் பேசியிருப்பேன்.
ஆனால், சரிதா வெறும் கண்ணையே காட்டி, கண்ணீர் விட்டு நடிச்சு, கிளாப்ஸ் வாங்கிட்டு போயிட்டாங்க" என்று பாராட்டி கூறியிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் ஹீரோக்களே சரிதாவுடன் பயந்துவிட்டார்களாம். அதிலும் 2 ஹீரோக்கள் சரிதாவுடன் நடித்தபோது, அவரது கேரக்டரை டம்மி செய்ய சொல்லி கேட்பார்களாம்.
அதில் ஒரு ஹீரோவுடன் பிரச்சனையே நடந்துள்ளது. ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு, ரஃப் போட்டு பார்க்கும்போது, சரிதா அந்த ஹீரோவைவிட சூப்பராக நடித்திருந்தாராம். அதைப்பார்த்த அந்த பிரபல நடிகர், "கத்தரி போடுங்க, அந்தம்மா சீனை எல்லாம் கட் பண்ணுங்க" என்றாராம்.
ஆனால், அந்த பிரபலமான டைரக்டரோ, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். 'நீங்க வேணும்னா விலகிடுங்க, நான் வேற ஹீரோவை வைத்து படம் எடுத்துக்கறேன்' என்று சொல்லிட்டாராம். பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் தமிழை சுத்தமாக பேசக்கூடியவர் சரிதா.
விஜயசாந்தி, ராதா, அம்பிகா, நதியா என எல்லாருக்குமே சரிதாதான் டப்பிங் தந்தார். அதிலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று விஜயசாந்தி கொண்டாடப்பட்டதற்கு சரிதாவின் குரலுக்கும் ஒரு முக்கிய பங்கும் உள்ளது. சில நடிகைகளும் சரிதாவுடன் நடிக்க பொறாமைப்பட்டுள்ளனர்.
இதை வருத்தப்பட்டு, பாலச்சந்தரிடம் சரிதா சொல்லியிருக்கிறார். அதற்கு பாலச்சந்தர், 'உன்னை பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்றால், நீ உச்சத்தில் வளர்ச்சி அடைகிறாய் என்று அர்த்தம். எதனை பற்றியும் கவலைப்படாமல் நடி" என்று தைரியம் சொன்னாராம். அதனால்தான் சரிதாவால் உச்சம் பெற முடிந்தது என்றெல்லாம் செய்யாறு பாலு பாராட்டி பேசியிருக்கிறார்.
0 கருத்துகள்