வணக்கம் நண்பர்களே! ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கான இன்றைய (பிப்ரவரி 23, 2024 ஞாயிற்றுக்கிழமை) ராசி பலன்களை இங்கே தொகுத்து வழங்குகியுள்ளேன்.
ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கான பலன்களை படித்து இன்றைய நாளை சிறப்பாக்குங்கள்!
மேஷம் (Aries):
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1
ரிஷபம் (Taurus):
தொழிலில் எதிர்பாராத தடைகள் வரலாம். சரியான உதவி கிடைத்து சமாளிப்பீர்கள். கடின உழைப்பால் வேலைப்பளுவை வெல்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு, சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 6, 1, 2, 9
மிதுனம் (Gemini):
மாமனார் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வீடு புதுப்பிக்கும் வேலைகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு பயண முயற்சிகள் சாதகமாகும். தான தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கிட்டும். வேலையில் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உற்சாகம் அடைவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்
- அதிர்ஷ்ட எண்: 5, 9, 4, 3
கடகம் (Cancer):
வெளியிடங்களில் உணவு உண்பதால் செரிமான கோளாறு ஏற்படலாம். உறவினர்களால் தொல்லைகள் வர வாய்ப்புள்ளது. தடைகளை தாண்டி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். காதலியின் அதிருப்தியான பேச்சால் மன வருத்தம் உண்டாகும். கீழே விழுந்த தந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை
- அதிர்ஷ்ட எண்: 2, 3, 8, 5
சிம்மம் (Leo):
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தொழிற்சாலை உற்பத்தியை அதிகரிப்பீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வைகாசி மாத வாஸ்து பூஜைக்கு தயாராவீர்கள். வங்கி கடன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். மனை, நிலம் வாங்குவீர்கள். செல்வம் பெருகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு, சாம்பல், வெள்ளை
- அதிர்ஷ்ட எண்: 1, 7, 6
கன்னி (Virgo):
விரும்பிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வு மகிழ்ச்சி அளிக்கும். விவசாய உற்பத்தியை பெருக்குவீர்கள். ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். கம்ப்யூட்டர் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி நிச்சயம். மனைவியின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம் சிவப்பு, வெள்ளை, சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9
துலாம் (Libra):
சகோதர உறவுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சரியான நேரத்தில் அவர்களின் உதவி கிடைக்கும். முன்கோபத்தால் உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழிலில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை
- அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3
விருச்சிகம் (Scorpio):
சாமர்த்தியமாக செயல்பட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாக்கு சாதுரியத்தால் வெளியூரில் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வித் திறன் மேம்படும். ஏழைகளுக்கு உதவி செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்
- அதிர்ஷ்ட எண்: 9, 3, 8, 5
தனுசு (Sagittarius):
பேச்சில் நிதானம் தேவை. தவறான வாக்குறுதியால் செல்வாக்கை இழக்க நேரிடலாம். மற்றவர்களால் அவமானப்பட வாய்ப்புள்ளது. போட்டி பந்தயங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டாம். வேலையில் கவனம் சிதறாமல் இருக்கவும். பொறாமைக்காரர்களால் வியாபாரத்தில் தொல்லைகள் வரலாம். தொழிலில் மந்த நிலை ஏற்பட்டு பண வரவு குறையும்.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 3, 7, 6, 1
மகரம் (Capricorn):
எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபம் அடைவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் முன்னேற்றம் அடையும். குழந்தை வரம் வேண்டி மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம் சிவப்பு, வெள்ளை, சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 9
கும்பம் (Aquarius):
நிலம் விற்பனையில் சாதனை படைப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டை பெறுவீர்கள். வீடு கட்ட இருந்த பிரச்சனைகள் தீரும். தீவிர முயற்சியால் வியாபாரத்தை உயர்த்துவீர்கள். குழந்தைகளின் அழுகை சத்தம் மன மகிழ்ச்சி தரும். சிறப்பான ஊதியம் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
- அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3
மீனம் (Pisces):
தந்தைக்கு மூட்டு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பீர்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். பழைய உறவுகளை புதுப்பித்துக்கொள்வீர்கள். நண்பர்களின் உதவியால் சுப காரியங்கள் செய்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் ஏற்படும். பணியாளர்கள் தைரியமாக செயல்படுவீர்கள். காதலியின் அன்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை
- அதிர்ஷ்ட எண்: 3, 8, 5
இந்த பலன்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியது உங்கள் ஜோதிடர்:சேலம் முத்துக்குமார்.
தொடர்ந்து ஜோதிடம் மற்றும் வாழ்க்கை வெற்றிக்காண ஆன்மீக வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொள்ள என்னுடன் இணைந்திருக்க வேண்டும் என்றால் என்னுடைய டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் குழுவில் என்னுடைய நண்பராக இணைந்து கொள்ளுங்கள். லிங்க் கீழே கொடுத்துள்ளேன். பல முன்னேற்றங்களை பெறலாம்.
நன்றி..!
0 கருத்துகள்