கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வரும் சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வாய்ப்புக்காக நடிகைகள் வீடியோ காலிலேயே எல்லை மீறிய செயல்களை செய்து காட்டுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோக்கள் வெளியாவதற்கு யார் காரணம், இதற்கு பின்னணியில் என்ன உண்மை இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என்றும், நடிகைகளுக்கு தொல்லை கொடுப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில், சிலர் வாய்ப்புக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் நடிகைகளை விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை தேவிபிரியா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவர் சீரியல் வாய்ப்புகள் குறித்து பேசியதாவது, "சீரியல் வாய்ப்பு கிடைக்கும்போது யாரும் உடனே படுக்கைக்கு சம்மதமா என்று கேட்க மாட்டார்கள். முதலில் அந்த படத்தில் நம்முடைய கதாபாத்திரம் என்ன, சம்பளம் எவ்வளவு, எங்கெல்லாம் சூட்டிங் நடக்கிறது, யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் கூறுவார்கள்.
அட்வான்ஸ் எவ்வளவு, சம்பளம் எவ்வளவு என அனைத்தையும் சொல்லிவிடுவார்கள். இதை கேட்டதும் ஒரு இரண்டு மூன்று நாட்கள் அந்த படம் பற்றிய கற்பனையில் நாம் மிதக்க ஆரம்பித்து விடுவோம். சம்பளம் வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும், என்னென்ன செய்யலாம், பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கும் படத்தில் நாம் நடிக்கும்போது நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கனவு காண ஆரம்பித்து விடுவோம்.
அந்த நேரத்தில் தான் 'அட்ஜஸ்ட்மென்ட்' என்ற குண்டை தூக்கிப் போடுவார்கள். எடுத்தவுடனே அட்ஜஸ்ட்மென்ட் என்றால் நடிகைகள் அடுத்த வாய்ப்புக்கு சென்று விடுவார்கள். ஆனால் இப்படி அவர்களுக்குள் இருக்கும் ஆசையை தூண்டிவிட்டு, அவர்களை கற்பனை உலகில் வாழ விட்டு திடீரென அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால், வாய்ப்பு என்ற சூழலை உருவாக்கி திணற வைப்பார்கள்.
அப்படித்தான் சில நடிகைகள் இப்படியான வலைகளில் சிக்கி விடுகிறார்கள்" என்று தேவிப்பிரியா கூறியுள்ளார். தேவிப்பிரியாவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நடிகைகளின் வீடியோக்கள் குறித்து புதிய கோணத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அவரது இந்த கருத்தை வைத்து பார்க்கும்போது, இந்த வீடியோக்கள் வெளியாவதற்கு நடிகைகளின் சம்மதமும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது.
அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் இப்படியான விரும்பத்தகாத சம்பவங்கள் ஏன் நடக்கப் போகிறது என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, இந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.