அம்பிகா வாழ்வின் சோகங்கள்.. அந்த நோய் இருக்குனு.. வயதான தோற்றம் ஏற்படுத்திய தாக்கம்..

80-களில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. 

சிவாஜி கணேசன், பிரபு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர். 

ஆனால், எதிர்பாராத விதமாக அவர் சினிமா துறையில் இருந்து திடீரென காணாமல் போனது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. நடிகை அம்பிகா குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

குடும்பப் பாங்கான முகம் - ஆரம்ப கால சினிமா வாழ்க்கை:

டாக்டர் காந்தராஜ் அவர்கள் அம்பிகா குறித்து பேசுகையில், குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட அம்பிகா ஒரு சாதாரண திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

இருப்பினும், இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய "அந்த ஏழு நாட்கள்" திரைப்படம் தான் அவருக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தின் தயாரிப்பில் ஆர்.எம். வீரப்பன் இருந்த காரணத்தினால், அந்த படத்தை பார்த்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள், தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து, அந்த படத்தையே தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எம். வீரப்பன் மீது கோபம் கொண்டதாக டாக்டர் காந்தராஜ் தெரிவித்தார். 

பாக்யராஜ் அந்த படத்தில் மலையாளியாக நடித்ததே எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

வாய்ப்புகள் குறைந்தது - வயதான தோற்றம்:

"அந்த ஏழு நாட்கள்" திரைப்படத்தை தொடர்ந்து அம்பிகா "வெள்ளை ரோஜா", "வாழ்க்கை", "விக்ரம்", "காக்கி சட்டை", "காதல் பரிசு" போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 

"காதல் பரிசு" திரைப்படத்தில் தனது தங்கை ராதாவுடனும் இணைந்து நடித்திருந்தார். ஆனால், "காதல் பரிசு" படத்தில் அம்பிகா நடித்தபோது, அவரது முகத்தில் வயதான தோற்றம் தென்பட ஆரம்பித்தது. 

அந்த படம் வெளியான சமயத்தில் திரையரங்குகளில் ரசிகர்கள் அம்பிகாவை பார்த்து "கிழவி கிழவி" என்று கேலி செய்ததாகவும் டாக்டர் காந்தராஜ் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அம்பிகாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடிவேலுவுடன் கூட்டணி - கிசுகிசு:

அம்பிகா திரையுலகில் உச்சத்தில் இருந்த போது, நடிகர் விஜயகாந்துடன் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அம்பிகா மட்டுமல்லாது பல நடிகைகளும் விஜயகாந்துடன் நடிக்க தயக்கம் காட்டியதாக டாக்டர் காந்தராஜ் தெரிவித்தார். 

ஆனால், காலப்போக்கில் விஜயகாந்த் முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு, அம்பிகாவே விஜயகாந்திடம் சென்று திரைப்பட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், ஒரு கட்டத்தில் அம்பிகா நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் வாய்ப்பு கேட்டு மன்றாடியதாகவும், அதன் காரணமாக வடிவேலுவுடன் இரண்டு படங்களில் அம்பிகா ஜோடியாக நடித்ததாகவும் டாக்டர் காந்தராஜ் கூறினார். வடிவேலு மற்றும் அம்பிகா இருவரையும் இணைத்து அப்போதைய செய்தித்தாள்களில் கிசுகிசு செய்திகள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு முறை விவாகரத்து - தனிப்பட்ட வாழ்க்கை:

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அம்பிகா என்.ஆர்.ஐ. பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் பிறந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

பின்னர் 2000 ஆம் ஆண்டில் நடிகர் ரவிகாந்தை அம்பிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2002 ஆம் ஆண்டு ரவிகாந்துடன் விவாகரத்து பெற்று தனது மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். 

தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார் என்றும் டாக்டர் காந்தராஜ் அந்த பேட்டியில் அம்பிகா குறித்து பகிர்ந்துள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்