தொடர்ந்து வெளியாகும் சீரியல் நடிகைகளின் அந்தரங்க காட்சி..! என்னதான் நடக்குது.. ராதிகா பிரீத்தி பகீர்


கடந்த சில தினங்களாக இணைய பக்கங்களில் சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோ காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளம்பி வருகிறது. 

சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகை ஸ்ருதி நாராயணன் என்ற ஒருவரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்கு இன்னும் சில சீரியல் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இது சீரியல் வாய்ப்புக்காகவும் நடிகைகள் சீரழிக்கப்படுகிறார்களா..? என்ற விவாதத்தை கிளப்பி இருக்கிறது. 

சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை தங்களின் ஆசைகளுக்கு இணங்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் சீரியல் உலகிலும் இந்த கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. 

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி சீரியல் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்வது குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். 

அவர் கூறியதாவது, சீரியல் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது.

இங்கே விஷயம் என்ன என்றால்.. படுக்கைக்கு சம்மதமா..? என்று சுற்றி வளைத்து கேட்க மாட்டார்கள். நேரடியாக நம்முடைய மேனேஜர்கள் மூலம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா என்று கேட்பார்கள். அதனை கேட்டு உறுதி செய்து கொள்வார்கள். அப்போது நடிகைகள் கொடுக்கக்கூடிய பதிலுக்கு ஏற்ப தான் எதிரில் இருப்பவர்கள் நடந்து கொள்வார்கள். 

சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரவில்லை என்றாலோ அவர்களுடைய ஆசைக்கும் இணங்கவில்லை  என்றாலோ குறிப்பிட்ட நடிகையின் கதாபாத்திரத்தை எதிர்மறையான கதாபாத்திரம் போல் காட்டுவார்கள். 

ஹீரோயினாக ஒப்பந்தமான நடிகையை வில்லி போல சித்தரித்து காட்டுவார்கள். இப்படி எல்லாம் சிக்கல்கள் நடந்திருக்கிறது என பேசி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post