விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. சமீப காலமாக இவர் யோகா மற்றும் தியான பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது பயிற்சிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
காரணம், அந்த வீடியோவில் விஜே மகேஸ்வரி மிகவும் கடினமான யோகாசனத்தை அசால்டாக செய்துள்ளார். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு, தனது முழு உடலையும் ஒரே எகிறில் அடுத்த பக்கத்திற்கு நகர்த்துகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த பதற்றத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர், "ஜஸ்ட் மிஸ் கொஞ்சம் விட்டிருந்தா கூட இடுப்பு உடைந்திருக்கும்", "ரொம்ப ரிஸ்க் எடுக்கிறீங்க", "பார்த்தாலே பயமா இருக்கு" என்று தங்களது கவலைகளை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், சிலர் அவரது துணிச்சலையும், உடற்கட்டுப்பாட்டையும் பாராட்டி வருகின்றனர். விஜே மகேஸ்வரி இதுபோன்ற கடினமான ஆசனங்களை தொடர்ந்து செய்து வருவது அவரது உடற்பயிற்சி மீதான அர்ப்பணிப்பை காட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், சில ரசிகர்கள் இதுபோன்ற ஆபத்தான பயிற்சிகளை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
எது எப்படியோ, விஜே மகேஸ்வரியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
.png)
.jpeg)
.jpeg)
.jpg)
.jpg)


