பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகேஸ்வரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த சில ரகசியங்களையும், துரோகங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
குறிப்பாக தந்தை மற்றும் கணவர் செய்த துரோகங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துரோகங்கள் குறித்து பேசிய மகேஸ்வரி, "என் வாழ்க்கையில் நிறைய துரோகங்களை நான் சந்தித்திருக்கிறேன்.
குறிப்பாக என்னுடைய அப்பா எனக்கு செய்த துரோகம், என்னுடைய கணவர் எனக்கு செய்த துரோகம் என சொல்ல முடியாத துரோகங்களை நான் அனுபவித்து இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், அந்த துரோகங்களில் இருந்து துவண்டு விடாமல், அதில் உள்ள நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு, உலகத்தை புரிந்து கொண்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
"அவர்கள் எனக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு போகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு உலகம் இப்படித்தான் என்பதை அறிந்து கொண்டு அடுத்தடுத்து என்னுடைய வாழ்க்கையில் அடுத்த படிகளுக்கு நான் பயணிக்க ஆரம்பித்து விட்டேன்" என்று மகேஸ்வரி கூறினார்.
தொடர்ந்து மறுமணம் குறித்து பேசிய மகேஸ்வரி, தனது விவாகரத்துக்கு பிறகு தாய் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்ததையும், அதில் தனக்கு இருந்த தயக்கத்தையும் வெளிப்படுத்தினார். "
என்னுடைய விவாகரத்துக்கு பிறகு மேட்ரிமோனி வலைதளங்களில் என்னுடைய அம்மா எனக்காக மாப்பிள்ளை தேடினார்கள். ஆனால் எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தும் நான் வேண்டாம் என கூறிவிட்டேன்.
ஏனென்றால் இரண்டாம் திருமணத்திற்கு மனதளவில் நாம் தயாராகவில்லை" என்று அவர் கூறினார். மறுமணம் குறித்து தற்போது அவசரமில்லை என்பதை உணர்ந்த தாய், இது என்ன கொடுமையா போச்சு.. சரி, உனக்கு எப்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உனக்கு தோன்றுகிறதோ அப்போது மாப்பிள்ளை தேடிக் கொள்ளலாம்" என்று விட்டுவிட்டதாக மகேஸ்வரி தெரிவித்தார்.
தற்போது தனது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக மகேஸ்வரி கூறினார்.
அதற்காக நடிப்பு மட்டுமின்றி, காஸ்ட்யூம் டிசைனிங் போன்ற வேலைகளையும் செய்து வருவதாக அவர் தெரிவித்தார். மகேஸ்வரியின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


