மேக்கப் இன்றி திரிஷா Workout.. டம்பிள்ஸ்கு பதிலாக கையில் என்ன வச்சிருக்கார் பாருங்க

நடிகை த்ரிஷா சமீபத்தில் தான் உயிராக நேசித்த தனது செல்ல நாய்க்குட்டியை இழந்து மிகுந்த சோகத்தில் இருந்தார். அந்த துயரத்தில் இருந்து மெல்ல மீண்டு வரும் அவருக்கு, புதிதாக ஒரு நாய்க்குட்டி பரிசாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில், அந்த புதிய நாய்க்குட்டியை வைத்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

மேக்கப் ஏதும் போடாமல், ஜிம் உடையில் வீட்டில் இருக்கும் த்ரிஷா, தரையில் உட்கார்ந்து எழும் ஸ்குவாட் உடற்பயிற்சியை செய்கிறார். ஆனால், அவரது கையில் டம்பிள்ஸுக்கு பதிலாக அந்த சின்னஞ்சிறிய செல்ல நாய்க்குட்டி இருக்கிறது. 

இதை பார்த்த ரசிகர்கள் "செம கியூட்", "பாவம் அந்த நாய் பயப்படப்போகுது", "இதை வெச்சு வொர்க்அவுட் பண்ணித்தான் இப்படி ஒல்லியாகிட்டீங்களா?" என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான "விடாமுயற்சி" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள "குட் பேட் அக்லி" படத்திலும் மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார். 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான டொவினோ தாமஸ் நடித்த "ஐடென்டிட்டி" படத்திலும் த்ரிஷா தான் கதாநாயகி. மேலும், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் "தக் லைஃப்" படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஏற்கனவே கமலுடன் "மன்மதன் அம்பு", "தூங்காவனம்" ஆகிய படங்களில் த்ரிஷா பணியாற்றியுள்ளார். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் "விஸ்வம்பரா" படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இப்படி வரிசையாக பல படங்களில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா தனது உடலையும் கச்சிதமாக பராமரித்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post