விபத்தில் சிக்கிய குழந்தைகளை பார்க்க விடாமல்.. அந்த நேரத்திலும் அதை கேட்டாங்க.. ரவி மோகன் கண்ணீர்!


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து சமீபத்தில் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, 2024 செப்டம்பரில் பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ரவி மோகன் தரப்பில் இருந்து வெளியாகி, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ரவி மோகன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, அவரது திருமண வாழ்க்கையில் அனுபவித்த சவால்களை வெளிப்படுத்தியுள்ளது.

அதில், விவாகரத்து அறிவிப்பிற்குப் பின், கிறிஸ்துமஸ் காலத்தில் தனது குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் பயணித்த கார் விபத்திற்கு உள்ளானபோது, இன்சூரன்ஸ் கையெழுத்திற்காக மட்டும் தன்னை அழைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஆர்த்தி தனது குழந்தைகளை பொதுவெளியில் காட்டி, பரிதாபத்தை உருவாக்க முயல்வதாகவும், இது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார். தனது குழந்தைகளை விட்டு ஒருபோதும் பிரிய மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்த அவர், அவர்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரவி மோகன் மேலும் கூறுகையில், ஆர்த்திக்கு தனது சம்பாத்தியம், சொத்து மற்றும் சமூக வலைதளங்களின் முழு உரிமையையும் அன்பின் பேரில் வழங்கியதாகவும், ஆனால் அவர் அதை புரிந்து கொள்ளவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

மாறாக, ஆர்த்தி தன்னை பணரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கியதாகவும், தனது பெற்றோரிடம் இருந்து பிரித்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளாக பெற்றோருக்கு ஒரு பைசா கூட செலவு செய்ய முடியாத அளவிற்கு தன்னை முடக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது தந்தையிடம் ஒரு மகனாக இருக்க முடியாத சூழலை ஆர்த்தி உருவாக்கியதாகவும் அவர் புலம்பியுள்ளார். இத்தகைய கொடுமைகளை அனுபவித்தாலும், தான் அமைதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரவி மோகனின் இந்த அறிக்கை ஆர்த்தி மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இதற்கு முன்னர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், ரவி மோகன் தனது அன்பையும், 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையையும் புறக்கணித்து, பாடகி கெனிஷாவுடன் உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால், இணையவாசிகள் ரவி மோகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இரு தரப்பு குற்றச்சாட்டுகளும் திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்