Healer-ன்னு சொன்ன கதையெல்லாம் பொய்.. ரவி மோகனை வெளுத்த சக நடிகர்..!

நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த ஜெயம் ரவி, 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இரண்டு மகன்களைப் பெற்றார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, 2024-ல் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்தார்.

இது தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்த்தி, இந்த முடிவு தனது சம்மதம் இல்லாமல் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும், தனியார் கல்லூரி நிறுவனருமான ஐசரி கணேசனின் மகள் திருமண விழாவில் ஜெயம் ரவி, கெனிஷா என்ற பெண்ணுடன் கைகோர்த்து வந்தது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

இருவரும் கணவன்-மனைவி போல நெருக்கமாக இருந்ததாகவும், இது விவாகரத்து விவகாரத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சக நடிகர் ஒருவர், ஜெயம் ரவி மனதளவில் பாதிக்கப்பட்டு, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவருக்கு அமைதியை வழங்க கெனிஷா உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

கென்யாவைச் சேர்ந்த கெனிஷா, உளவியல் படித்தவர் மட்டுமல்ல, ஆன்மிகம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றிலும் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. 

ஆனால், பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், கெனிஷாவை ஒரு ஹீலர் என்பதை மறுத்து, இருவரும் ஒரு வணிக பாட்னர்களாக இருப்பதாகவும், விரைவில் ஒரு ஹீலிங் மையம் தொடங்க உள்ளதாகவும், இதற்கு ஜெயம் ரவி பொருளாதார உதவி செய்வதாகவும் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

இது ரசிகர்களிடையே மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெயம் ரவி தரப்பில், கெனிஷாவுடனான உறவு தொழில்முறை சார்ந்தது மட்டுமே என்று விளக்கமளிக்கப்பட்டாலும், இருவரும் நெருக்கமாக இருப்பதாக வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம், திரையுலகில் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது விமர்சனங்களுக்கு இடையேயான எல்லையை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளது. விவாகரத்து வழக்கு எவ்வாறு முடியும், ஜெயம் ரவியின் அடுத்த பயணம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--