லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் ஆபாசப் பட நடிகை மியா கலிஃபா, தனது குறுகிய கால ஆபாசத் துறை அனுபவத்தின் இருண்ட பக்கங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து, உலகளவில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

வெறும் 12 வீடியோக்களில் நடித்து, உலகின் மிகவும் பிரபலமான ஆபாச நடிகையாக உயர்ந்த மியா, இத்துறையில் நடந்த அனுபவங்களையும், அதன் தாக்கங்களையும் தனது பேட்டியில் விவரித்தார்.
மியா கலிஃபா, ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திய பின்னர், இன்ஸ்டாகிராமில் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலம் மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, "எனது வசதி வாய்ப்புக்காக இந்தத் துறையில் நுழைந்தேன். இப்போது அந்த வசதி கிடைத்துவிட்டதால், இதற்கு மேல் இந்தத் தொழிலில் தொடர விருப்பமில்லை," என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.ஆனால், ஆபாசத் துறையின் உள்ளார்ந்த பிரச்சினைகளை அவர் வெளிப்படுத்தியபோது, இந்தத் துறையின் மறுபக்கம் தெளிவாக வெளிச்சத்திற்கு வந்தது.
"நீங்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை நிறுத்தும்போது, இந்தத் துறை எவ்வளவு மோசமானது என்பதை உணர்வீர்கள். என்னை ஒரு பெண்ணாக அல்ல, வெறும் பொருளாக மட்டுமே காட்டினார்கள், பயன்படுத்தினார்கள்," என்று வேதனையுடன் கூறினார் மியா.

இந்தப் பிரச்சினை தனக்கு மட்டுமல்ல, இத்துறையில் நடிக்கும் ஆண்களுக்கும் பொருந்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்."பொதுவாக, ஆபாசப் படங்களில் நடிப்பவர்கள் மிருகத்தனமாக நடந்து கொள்வதாக பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்தத் துறையில் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் ஒரு பெரிய ஒழுக்கத்தை நான் கண்டேன்.
இயக்குநர்கள், சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வேலையை மட்டுமே செய்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மோசமான கட்டளைகளும், செயல்களும் எங்களுக்கு விதிக்கப்படுகின்றன.

அவற்றை நாங்கள் தொழில் மீதான அன்பால் செய்கிறோம், பிடித்து செய்வதில்லை," என்று மியா விளக்கினார்.மேலும், ஆபாசத் துறையை விட்டு வெளியேறிய பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களையும் அவர் பகிர்ந்தார். "பொது இடங்களில் செல்லும்போது, எனக்கென்று தனித்துவமோ, தனிப்பட்ட வாழ்க்கையோ இல்லாதது போல உணர்கிறேன்.
என்னைப் பார்ப்பவர்கள் எல்லோரும் எனது அந்தரங்கத்தை ஒரு கூகுள் தேடலில் பார்த்தவர்கள் என்ற எண்ணம் என்னை கடினமாக உணர வைக்கிறது. இதனால், பெரும்பாலும் தனிமையில் இருக்கவே விரும்புகிறேன்," என்று மனம் திறந்தார்.

மியாவின் இந்தப் பேட்டி, ஆபாச பட துறையின் மறைமுகமான துன்பங்களையும், அதில் ஈடுபடுவோரின் மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
இவரது வெளிப்படையான பேச்சு, இத்துறையைப் பற்றிய பொதுமக்களின் புரிதலை மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Summary : Mia Khalifa, a former adult film actress, exposed the dark side of the industry, revealing exploitation and objectification of both men and women. After quitting, she earns millions through Instagram endorsements. She struggles with public perception and prefers solitude, highlighting the industry's lasting impact.


