தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட நடிகை முமைத் கான், சமீபத்திய பேட்டி ஒன்றில் கவர்ச்சி நடிகைகள் குறித்து பொதுவாக நிலவும் தவறான கருத்துக்களுக்கு எதிராக தனது கருத்துக்களை துணிச்சலாக பகிர்ந்து கொண்டார்.

இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.முமைத் கான் தனது பேட்டியில், "கவர்ச்சி நடிகைகள் என்றாலே அவர்களை பொருளாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் சமூகத்தில் உள்ளது.
நான் குட்டியான ஆடைகளை அணிந்து, என் உடல் தெரியும் வகையில் நடனமாடுகிறேன் என்று, என்னை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுகிறார்கள்.மோசமான கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை," என்று கூறினார்.
.jpg)
தொடர்ந்து, தனது தொழிலை ஒரு பொறுப்பாகவும், கடமையாகவும் பார்ப்பதாக விளக்கினார். "நான் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன். என் வேலையை நேசிக்கிறேன், அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறேன்.
ஒரு பேட்டி எடுப்பவர் தனது முதலாளி சொல்லும் வேலையை செய்வது போல, ஒரு இயக்குநர் என்னிடம் எதிர்பார்க்கும் கவர்ச்சி நடனத்தை நான் செய்கிறேன். இதில் எந்த வித்தியாசமும் இல்லை.
அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு இருப்பது போல, என் தொழிலுக்கும் ஒரு கட்டமைப்பு உள்ளது.அந்த கட்டமைப்பிற்குள் நான் என் வேலையை செய்கிறேன்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
.jpg)
மேலும், "எனது ஆடைகள், என் வீட்டு வாடகை, குடும்ப உணவு செலவு, வாகன எரிபொருள் செலவு ஆகியவற்றிற்கு பணம் தர யாரும் வரப்போவதில்லை. என் வேலை மட்டுமே எனக்கு அந்த பணத்தை தருகிறது. அதனால், நான் என் வேலையை நேசிக்கிறேன்.
ஆனால், கவர்ச்சி நடிகைகள் என்றால் படப்பிடிப்பில் பலருடன் உடலுறவு கொள்வார்கள் என்று அவர்களாகவே யூகித்து கொண்டு பேசுவது தவறு. அப்படி பேசுபவர்களுக்கு பதில் கொடுப்பதில் அர்த்தமே இல்லை. எனக்கு சுயமரியாதையும், சுய கட்டுப்பாடும் உள்ளது. அது தான் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம்" என்று உறுதியாக பதிலளித்தார்.
.jpg)
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கருத்துக்களை பெற்று வருகிறது.
பலர், "முமைத் கானின் தைரியமான பேச்சு பாராட்டுக்குரியது. கவர்ச்சி நடிகைகளை தவறாக புரிந்து கொள்ளும் மனப்பான்மையை மாற்ற வேண்டும்," என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Summary : Actress Mumaith Khan, in a recent interview, boldly addressed misconceptions about glamorous actresses, emphasizing her professionalism and self-respect. She highlighted that her work, like any job, supports her family, rejecting derogatory assumptions and asserting her dignity within the industry's framework.

