'கடனை' அடைக்க எளிமையான வழி - வெளிப்படையாக 'பேசிய' நடிகர் சசிகுமார்
நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சினிமாவுக்காக வாங்கிய கடனை எப்படி சமாளித்தார் என்பதை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அவர் ஒரு விஷயத்தை தெளிவாக பிரித்து வைத்திருந்தார். நடிப்பு வேறு, குடும்பம் வேறு. தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை வீட்டுக்குள் கொண்டு போகக் கூடாது என்ற மனநிலையில் இருந்தார். அதனால் வீட்டுக்கு சென்றால் விடுமுறை நாளில் இருப்பது போல நிம்மதியாக உணர்ந்ததாக கூறுகிறார். குடும்ப ஆதரவு ஆரம்பம் முதலே இருந்தது என்கிறார் சசிகுமார். “நாங்க கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்து வருகிறோம். அவங்க சப்போர்ட் இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. அவங்களால்தான் நான் தைரியமாக இருந்தேன்” என்று நன்றி உணர்வுடன் பேசுகிறார். ஒரு கட்டத்தில் படம் தயாரிப்புக்காக கடன் வாங்க நேர்ந்தது. அப்போதும் வீட்டில் உள்ளவர்கள் பயத்தை அதிகப்படுத்தவில்லை. மாறாக ஒரு எளிய ஆலோசனை சொன்னார்கள். “நீ மொத்தக் கடனையும் பெரியதாக பார்க்காதே. அதை சின்ன சின்னதாக தனித்தன...