"படிக்கும் போதே.. அந்த இடத்தில உடலுறவு.." இப்போ படிப்பே போச்சு.. சுற்றி வளைக்கப்பட்ட மாணவி..

கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கிறார். 

அவருடைய காதலன் ஒரு கட்டத்தில் மாணவி தன்னுடைய காதலனை தவிர்க்கஆரம்பித்திருக்கிறார் இதனால் கடுப்பான காதலன் மாணவியுடன் தனிமையில் இருந்த காட்சிகளை மாணவியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி இருக்கிறார். 

இது ஒரு கொடுமை என்றால் இதற்குப் பிறகுதான் மாணவிக்கு முழு கொடுமையும் நடக்க ஆரம்பித்து இருக்கிறது அதன்படி காவல் துறையில் புகார் செய்தபோது மாணவிக்கு எதிரான மனநிலையில் காவல்துறை அவரை அனுகி இருக்கிறது.. கல்லூரி நிர்வாகமும் மாணவிக்கு எதிரான மனநிலையில் இருந்திருக்கிறது.. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, பர்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.

இவரது உறவினரான போச்சம்பள்ளி அருகே மேட்டுப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (வயது 24), பி.எஸ்.சி. முடித்துவிட்டு வீட்டில் இருந்தவர். முன்னர் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஒரு பெண்ணுடனான காதல் முறிவால் மனமுடைந்திருந்த சந்துருவுக்கு, மாணவி தொலைபேசி வழியாக ஆறுதல் கூறி வந்தார்.

ஆனால், இந்த ஆறுதல் அண்ணன்-தங்கை உறவை மீறி, இருவருக்கும் இடையே காதலாக உருமாறியது.இருவரும் தனிமையில் சந்தித்து, மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசி காதலை வளர்த்தனர். இதனை அறிந்த மாணவியின் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும், “அவன் உனக்கு அண்ணன் முறை, இது தவறு” எனக் கண்டித்தனர்.

இதையடுத்து, மாணவி சந்துருவுடன் பேசுவதைத் தவிர்த்தார். ஆனால், சந்துரு, “நீ பேசாவிட்டால், நாம் தனிமையில் இருந்த அந்தரங்க வீடியோக்களை அனைவருக்கும் அனுப்புவேன்” என மிரட்டினார். மாணவி இதனை விளையாட்டாக எண்ணி, “முடிந்ததை செய்” என பதிலளித்தார்.

ஆனால், சந்துரு மாணவியின் தோழிக்கு வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி, “பேசாவிட்டால் மேலும் வீடியோக்கள் அனுப்புவேன்” என மிரட்டினார்.பதறிப்போன மாணவி, சந்துருவிடம் கெஞ்சினார். ஆனால், சந்துரு ஏற்கனவே மாணவியின் செல்போனில் இருந்த தொடர்பு எண்களை எடுத்து வைத்திருந்தார்.

அவர், மாணவியின் உறவினர்கள், தோழிகள் உள்ளிட்டோருக்கு அந்தரங்க வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பினார். இதனால் மனமுடைந்த மாணவி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார், “சந்துரு இனி இப்படி செய்ய மாட்டான்” என எழுதி வாங்கி, மாணவியையும் எழுதி கொடுக்கச் சொல்லி சமாதானப்படுத்தினர்.

இருவரின் செல்போன்களையும் பிளாஷ் செய்து, மூன்று நாட்களுக்குப் பின் திருப்பி அளித்தனர்.ஆனால், சந்துரு வீடியோக்களை தனது லேப்டாப்பில் சேமித்து வைத்திருந்தார். ஒரு வாரம் கழித்து, மாணவியின் பெற்றோர், உறவினர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், சக மாணவிகளுக்கு வீடியோக்களை அனுப்பினார்.

மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்ற மாணவி, “வீடியோக்கள் பரவுகின்றன” என புகார் அளித்தார். ஆனால், போலீசார், “கண்டுகொள்ளாமல் விடு, அவன் சலித்து நிறுத்திவிடுவான்” என பதிலளித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தற்கொலைக்கு முயன்றார்.

பெற்றோரால் காப்பாற்றப்பட்ட அவர், சந்துருவின் அக்காவிடம் வீடியோக்களை அழிக்கக் கோரினார். ஆனால், “சந்துரு எங்களையே அடிக்கிறான், எங்களால் எதுவும் செய்ய முடியாது” என அவரது அக்கா மறுத்தார்.

சந்துரு, மாணவியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அவரது முகம் தெரியும் வகையில் வீடியோக்களைப் பதிவிட்டார். இதனால், மாணவி வெளியே வர முடியாமல், கல்லூரிக்கு செல்ல இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

கல்லூரி ஆசிரியர்கள், “உன்னால் கல்லூரிக்கு கெட்ட பெயர், இனி வர வேண்டாம்” எனக் கூற, மாணவி படிப்பை கைவிட்டார்.கடந்த 10ஆம் தேதி, மாணவி தனது அம்மா, அக்கா மற்றும் உறவினர்களுடன் சந்துருவின் வீட்டிற்கு சென்று, லேப்டாப் மற்றும் செல்போனை எடுக்க முயன்றார்.

அப்போது, சந்துரு அரிவாளுடன் தாக்கியதில், மாணவி உள்ளிட்ட பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சந்துருவும் தன்னை தாக்கியதாகக் கூறி, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போச்சம்பள்ளி போலீசார், அடிதடி வழக்கு மட்டும் பதிவு செய்து, மற்ற புகார்களை கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்தின் மெத்தனமான அணுகுமுறையால், மாணவியின் கல்வி மற்றும் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உயர் காவல் அதிகாரிகள் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து, மாணவி பயமின்றி கல்லூரி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்தரங்க வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டுவது, பொதுவெளியில் பகிர்வது பெருங்குற்றம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Summary in English : A Krishnagiri college student was blackmailed by her cousin Chandru, who shared their intimate videos after she ended their illicit affair. Despite her complaints, police inaction led to her suicide attempt. Chandru later assaulted her family, escalating the issue. She dropped out of college, fearing public shame.Keywords: Krishnagiri, blackmail, intimate video, Chandru, police inaction, suicide attempt, assault, college dropout, privacy violation, revenge.