தந்தையின் நெஞ்சை இரண்டாக பிளந்த மகன்.. குபீரென வெளியே வந்து விழுந்த நுரையீரல்.. அதிர வைக்கும் காட்சி..

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே மேலப்பாதி வாய்க்காங்கரை தெருவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சிவக்குமார் (வயது 45) தனது மகனால் கத்தியால் குத்தி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராறு காரணமாக நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தில், சிவக்குமாரின் மகன் அபினேஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.சிவக்குமார், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசெல்வி மற்றும் ரேவதி என்ற அக்கா-தங்கை இருவரை மணந்திருந்தார்.

முதல் மனைவி ஜெயசெல்விக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும், இரண்டாவது மனைவி ரேவதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சனை காரணமாக முதல் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளைப் பிரிந்த சிவக்குமார், இரண்டாவது மனைவி ரேவதியுடன் கீழையூர் உப்புச் சந்தை மாரியம்மன் கோயில் எதிரே வாய்க்கால் ஓரத்தில் கொட்டகை அமைத்து வசித்து வந்தார்.

அங்கு அவர் கரும்பு ஜூஸ் கடையும் நடத்தி வந்தார்.சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன், சிவக்குமாரைப் பார்க்க வந்த ஜெயசெல்வியின் மூத்த மகன் சிவசர்மா, நிலத்தில் வீடு கட்ட பட்டா கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல், சென்னையில் வசித்து வந்த மூன்றாவது மகன் அபினேஷும் சொந்த ஊருக்கு வந்து, தந்தையிடம் பட்டா கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. சிவக்குமாரின் இரண்டாவது மனைவி ரேவதி, கதறியபடி கூறுகையில், “எதுக்குடா சாவ சொன்னேன்னு கேட்டான் சார்.

ஏன்டா உன்ன தானடா வந்து வந்து என்ன அடிச்சிட்டு போறான். நீங்க திருப்பி திருப்பி என்ன இடைச்சு கொடுத்துட்டே இருக்கறீங்களேடா. எதுவும் வேணானுதானடா நான் ரோட்டு வாரம் வந்து கிடக்குறேன்,” என்று கணவர் தனது மகனிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிவித்தார்.

இதன்போது, மது போதையில் இருந்த அபினேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தந்தை சிவக்குமாரின் நெஞ்சில் ஒரே குத்தாக குத்தியதாகவும், இதில் நுரையீரல் வெளியே வந்து, ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் தனது மடியில் சுருண்டு விழுந்து துடிதுடித்து உயிரிழந்ததாகவும் ரேவதி அழுதவாறு கூறினார்.

“கொன்னுட்டாங்க சார், அவன் தனிமரம் ஆயிடுவான்னு இடுப்புல வச்சிருந்த கத்தி எடுத்து கொரிய குத்தி சொற இழுத்துட்டான். ரத்தத்தோட மலாக மாடியில விழுந்த வருதா சார், கண்ண மூழிட்டாரு சார்,” என்று ரேவதி கதறியது, அங்கிருந்தவர்களின் மனதை உருக்கியது.

மேலும், அக்காவும் அவரது மகன்களும் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாகவும், 15 ஆண்டுகளாக பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முடிவு கிடைக்கவில்லை என்றும் ரேவதி வேதனை தெரிவித்தார்.

சம்பவத்தை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தரங்கம்பாடி காவல் துறையினர், சிவக்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையை கொலை செய்த மகன் அபினேஷை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொத்து தகராறு காரணமாக மகனால் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary : In Mayiladuthurai, a property dispute led to a tragic incident where Abinesh stabbed his father, Sivakumar, to death. The attack, near Tharangambadi, caused Sivakumar's lung to rupture. Abinesh was arrested, and the incident has shocked the local community, highlighting family tensions.