சென்னை, ஆகஸ்ட் 25, 2025: சென்னை வேப்பேரி பகுதியில் காதலனின் திருமண மறுப்பால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், அவரது கண்முன்னே ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வேப்பேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, காதலனை கைது செய்துள்ளனர்.சென்னை ராயபுரம், புதுமனைக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மொத்த ஜவுளி வியாபாரி தேவேந்திரனின் மகள் ஹர்ஷிதா (25), மாற்றுத்திறனாளியாக இருந்தவர்.
இவர் வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரை ஒரு ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். இருவரும் கல்லூரி காலத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி, நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களானார்கள்.
.jpg)
இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அண்ணாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், திடீரென தர்ஷன், ஹர்ஷிதாவிடம் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
.jpg)
இந்நிலையில், ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு, ஹர்ஷிதா தனது அக்காவின் கணவர் பிரபுல் (37) மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் (42) ஆகியோருடன் வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டிற்கு சென்றார். அங்கு தர்ஷனின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர், ஹர்ஷிதாவும் தர்ஷனும் தனியாகப் பேசியபோது, தர்ஷன் மீண்டும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, ஹர்ஷிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஹர்ஷிதா, “நீ தான் என் கணவன், உன்னைத் தவிர வேறு கணவனை நினைக்க முடியாது.
.jpg)
திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வேன்,” என உருக்கமாகக் கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தர்ஷன் இதைப் பொருட்படுத்தாமல், “அது உன் விருப்பம்,” என அலட்சியமாக பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் மனமுடைந்த ஹர்ஷிதா, தர்ஷனின் வீட்டின் ஏழாவது மாடிக்கு ஓடிச் சென்று கீழே குதித்தார்.
.jpg)
அவரைத் தடுக்க தர்ஷனும் அவரது குடும்பத்தினரும் முயன்ற போதிலும், ஹர்ஷிதா கீழே விழுந்து உடல் சிதறி உயிரிழந்தார். முதலில் அவர் ஏழாவது மாடியின் பால்கனியில் விழுந்தபோது, மீண்டும் தர்ஷனிடம் திருமணம் செய்யக் கெஞ்சியதாகவும், அவரது மறுப்பால் மீண்டும் குதித்து உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வேப்பேரி காவல்துறையினர், ஹர்ஷிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
.jpg)
மேலும், ஹர்ஷிதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக தர்ஷன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேப்பேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
குறிப்பு: தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Summary : In Chennai’s Vepery, Harshitha, a 25-year-old woman, died by suicide after jumping from the seventh floor of her fiancé Darshan’s house. Engaged in February, Darshan refused to marry her, leading to an argument. Despite attempts to stop her, Harshitha jumped, and Darshan was arrested.

