திருமணம் செய்ய மறுப்பு.. காதலன் கண்முன்னே காதலி உடல் சிதறி பலி.. பதற வைக்கும் காட்சிகள்..!
சென்னை, ஆகஸ்ட் 25, 2025: சென்னை வேப்பேரி பகுதியில் காதலனின் திருமண மறுப்பால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், அவரது கண்முன்னே ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேப்பேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, காதலனை கைது செய்துள்ளனர்.சென்னை ராயபுரம், புதுமனைக் குப்பம் பகுதியைச் சேர்ந்த மொத்த ஜவுளி வியாபாரி தேவேந்திரனின் மகள் ஹர்ஷிதா (25), மாற்றுத்திறனாளியாக இருந்தவர். இவர் வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரை ஒரு ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். இருவரும் கல்லூரி காலத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி, நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களானார்கள். இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அண்ணாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், திடீரென தர்ஷன், ஹர்ஷிதாவிடம் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து, அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு, ஹர்ஷிதா தனது அக்காவின் கணவர் பிரபுல் (37) மற்ற...