கடைசியா ஒருமுறை உடலுறவு.. இளம்பெண்ணுக்கு டாக்டரின் வோட்கா மசாஜ்.. கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..

சென்னை கொடுங்கையூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த இளம்பெண் நித்யாவின் மர்மமான மரணம் தொடர்பாக மருத்துவர் சந்தோஷ் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கையில் இருந்த பல் தடத்தால் இந்த கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் நித்யா, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவர் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகனுடன் காதல் உறவில் இருந்து, அம்பத்தூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தனர்.

நித்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வர இருந்ததால், பாலமுருகனை வெளியே தங்குமாறு நித்யா கூறியிருந்தார்.

பின்னர், வீட்டிற்கு திரும்பி வந்த பாலமுருகன், நித்யா பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நித்யாவின் பெற்றோர், 25 சவரன் தங்க நகைகள் மாயமானதாகவும், பாலமுருகன் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்தனர். ஆனால், பாலமுருகன் விசாரணையில், நித்யாவிற்கும் அவரது பெற்றோருக்கும் பணப்பிரச்சனை காரணமாக சிறு தகராறுகள் இருந்ததாகவும், நித்யா நீண்ட நேரம் தொலைபேசியில் பதிலளிக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்ததாகவும் தெரிவித்தார்.

போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக மருத்துவர் சந்தோஷ் குமாருடன் பேசியிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சந்தோஷ் குமார் உண்மைகளை ஒப்புக்கொண்டார். நித்யா ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் பறித்து வந்ததாகவும், ஆடம்பர வாழ்க்கைக்காக வீடியோ அழைப்புகள் மூலம் பணம் பறிப்பது, பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்வது, மது அருந்துவது என வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

நித்யாவிற்கும் சந்தோஷ் குமாருக்கும் ஒரு நண்பரின் திருமணத்தில் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி லிவிங் டுகெதரில் வாழ்ந்தனர். ஆனால், நித்யா வேறு ஒருவருடன் பழகியதால் ஏற்பட்ட தகராறு காவல் நிலையம் வரை சென்றது.

பின்னர், நித்யா மீண்டும் சந்தோஷுடன் உறவை புதுப்பிக்க முயன்றபோது, அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் சந்தோஷ் விலகினார். ஆனால், நித்யா, சந்தோஷுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி, அவரது சம்பளத்தில் பெரும் பகுதியை பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், “உனக்கு திருமணமானாலும் விடமாட்டேன்” என நித்யா மிரட்டியதால், சந்தோஷ் குமார் கொலை செய்ய திட்டமிட்டார். கடைசியாக ஒருமுறை சந்திக்கலாம் எனக் கூறி, நித்யாவின் வீட்டிற்கு வந்த அவர், ஓடாவில் மாத்திரை கலந்து கொடுத்து, மசாஜ் செய்யுமாறு நித்யா கூறியபோது, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர், நித்யாவின் கைரேகையைப் பயன்படுத்தி லாக்கரை திறந்து 25 சவரன் நகைகளை திருடி, அவற்றை முஜிபர் என்பவரிடம் ஒப்படைத்தார். முஜிபருக்கு கொலை தெரியாது என சந்தோஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்யும்போது, நித்யா சந்தோஷின் கையை கடித்ததால் ஏற்பட்ட காயத்தால் அவர் போலீசாரிடம் சிக்கினார். தற்போது, முஜிபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary : In Chennai's Kodungaiyur, Nithya, a 26-year-old woman living with her partner, was found dead. Dr. Santosh Kumar was arrested after a bite mark on his hand linked him to the murder. Nithya allegedly extorted money, leading to her planned killing and theft of 25 sovereigns of gold.