தமிழ் சினிமாவில் ‘ஜெமினி’, ‘வில்லன்’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை கிரண், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ-பீஸ் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களுடன் அவர் பதிவிட்ட கேப்ஷன், பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.கிரண் தனது கேப்ஷனில், “சிங்கிளாக இருப்பதற்கும் தனிமையில் இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நான் சிங்கிள் கிடையாது, தனிமையில் இருக்கிறேன். ஒரே ஒரு போன் கால் செய்தால் போதும், நாளையே நான் என் புருஷனுடன் இருப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்தபடி எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக, கிரணின் ஸ்டைலான தோற்றமும், அவரது கேப்ஷனில் உள்ள மர்மமான தொனியும் ரசிகர்களை ஆர்வமடையச் செய்துள்ளது. “இவர் என்ன சொல்ல வருகிறார்?”, “யார் அந்த புருஷன்?” என்று ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இதனை வெறும் விளம்பர உத்தியாகவும், மற்றவர்கள் இதில் ஆழமான தனிப்பட்ட கருத்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.நடிகை கிரண், தனது திரைப்பட வாழ்க்கையில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
சமீப காலமாக திரைப்படங்களில் பெரிதாக தோன்றாத அவர், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்து வருகிறார். இந்த சமீபத்திய பதிவு, அவரது ரசிகர் பட்டாளத்திடையே மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.



