அனுபமா கிளப்பிய பூகம்பம்.. நடிகர் துருவ் விக்ரமின் பதில்.. நின்றுபோன நிச்சயதார்த்தம்! அம்மா இப்படி பண்ணலாமா?
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி, திரையுலக வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. தனது கடந்த கால உறவு பற்றி மனம்விட்டு பேசிய அனுபமா, அந்த உறவில் தான் சந்தித்த மன அழுத்தம், கட்டுப்பாடுகள் மற்றும் தன்னை இழந்தது போன்ற உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். அந்த உறவில் ஒரு நாள் மிகவும் நெருக்கமாகவும், அடுத்த நாள் முற்றிலும் அன்னியனாகவும் மாறிவிடும் தன்மை இருந்ததாகவும், பிறகு எதுவும் நடக்காதது போல வந்து மன்னிப்பு கேட்கும் நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அனுபமா தனது முன்னாள் காதலரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் ரசிகர்கள் இந்தப் பேச்சை நடிகர் துருவ விக்ரமுடன் இணைத்து விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த படத்தின் போது காதலித்ததாகப் பல செய்திகள் பரவியிருந்தன. அப்போது இருவருமே அதை மறுக்கவில்லை. மாறாக அனுபமாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு துருவ விக்ரம் அதிக எண்ணிக்கையில் விருப்பங்களை அளிப்பதும், துருவின் பதிவுகளுக்கு அனுபமா நீண்ட நேரம் ஹார்ட் எமோஜிகளை அனுப்புவதும் என சமூக வலைதளங்களில் ...