செல்லமே என்ற படத்தில் கதாநாயகியுடன் தம்பி போல சிறு வயதிலிருந்து வளரும் ஒருவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் கதாநாயகி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வது தாங்கிக் கொள்ள முடியாமல் திருமணத்திற்கு பிறகு கதாநாயகியை கடத்திச் சென்று நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி கொடுமை செய்வான்.

மறுபக்கம், கதாநாயகன் தன்னுடைய மனைவியை காப்பாற்ற போராடுவான். படத்தின் கிளைமாக்ஸில், இத்தனை கொடுமைகள் நடந்த பிறகும் தம்பி போல வளர்த்து வந்த இளைஞன் இறந்து விட்டதை நினைத்து கதாநாயகி கதறி துடிப்பார். இதனை மிஞ்சும் அளவுக்கு ஒரு கொடூரம் உண்மையில் அரங்கேறி இருக்கிறது.
அக்கா தம்பி என்று பழகி வந்த இது மிருகங்களில் 3 குழந்தைகள் மற்றும் கணவரை அனாதையாக நிறுத்திய உண்மை சம்பவம் தான் இது. சமீப காலமாக சட்டவிரோத உறவுகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு புறநகரில் உள்ள அனேகல் பசவனபுரா கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.மஞ்சுநாத் என்பவரும் அவரது மனைவி லீலாவதியும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆனால், லீலாவதி தனது கணவனையும் மூன்று குழந்தைகளையும் புறக்கணித்துவிட்டு, சந்து என்ற நபருடன் காதல் உறவு ஏற்படுத்தி, மூன்று நாட்களுக்கு முன்பு அவருடன் தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து மஞ்சுநாத், பன்னேர்கட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், லீலாவதி காவல் நிலையத்திற்கு தனது காதலனுடன் வந்து, “எனக்கு என் கணவனோ, குழந்தைகளோ வேண்டாம்; எனக்கு என் காதலன் மட்டுமே வேண்டும்” என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதற்கிடையில், குழந்தைகள் “அம்மா வேண்டும்” என்று அழுது புரள, மஞ்சுநாத் தனது மனைவியை இழந்து வேதனையில் தவிக்கிறார்.மஞ்சுநாத் வெளியிட்ட ஒரு வீடியோ இந்த சம்பவத்தை இந்தியா முழுவதும் பேசு பொருளாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், அவர் தனது வேதனையை பகிர்ந்து கொண்டு, “எனது மனைவி என்னை ஏமாற்றுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. சமீப காலமாக புதிய புடவைகள் வாங்கி வந்தாள், ஆனால் அவை எல்லாம் சந்து வாங்கிக் கொடுத்தவை என்று எனக்கு தெரியவில்லை.
விநாயகர் சதுர்த்தி அன்று அவன் என் வீட்டைச் சுற்றி வந்தான், ‘அண்ணா’ என்று அழைத்ததால், அவன் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால், இப்போது என் மனைவியும் அவனும் காதலித்து, எங்களை விட்டு ஓடிவிட்டனர். இப்போது நானும் எங்கள் மூன்று குழந்தைகளும் அனாதையாக நிற்கிறோம்,” என்று கண்ணீர் மல்க புலம்புகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்த்தவர்களை கண்ணீர் விட வைத்துள்ளது.இத்தகைய சம்பவங்கள், திருமணத்திற்கு புறம்பான உறவுகளை ஊக்குவிக்கும் சில இயக்கங்கள் மற்றும் அமைப்புகளால் மேலும் தூண்டப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
இவை குடும்ப அமைப்பை சீர்குலைத்து, குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கின்றன. இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், குடும்ப மதிப்புகளை வலியுறுத்துவதும் அவசியமாகிறது. இந்த சம்பவம், சமூகத்தின் தற்போதைய நிலை குறித்து ஆழமான சிந்தனையைத் தூண்டியுள்ளது.
Summary : In Bengaluru’s Anekal Basavanapura, Leelavathi, married to Manjunath for 11 years with three children, eloped with her lover, Santu. Manjunath filed a missing complaint, but Leelavathi declared she prefers her lover. A viral video of Manjunath’s anguish has sparked nationwide outrage, highlighting societal concerns.

