அக்கா-தம்பி உறவை நாசம் செய்த மனைவி.. கதறி அழும் கணவர்.. செல்லமே படத்தை மிஞ்சும் உண்மை சம்பவம்..
செல்லமே என்ற படத்தில் கதாநாயகியுடன் தம்பி போல சிறு வயதிலிருந்து வளரும் ஒருவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் கதாநாயகி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வது தாங்கிக் கொள்ள முடியாமல் திருமணத்திற்கு பிறகு கதாநாயகியை கடத்திச் சென்று நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி கொடுமை செய்வான். மறுபக்கம், கதாநாயகன் தன்னுடைய மனைவியை காப்பாற்ற போராடுவான். படத்தின் கிளைமாக்ஸில், இத்தனை கொடுமைகள் நடந்த பிறகும் தம்பி போல வளர்த்து வந்த இளைஞன் இறந்து விட்டதை நினைத்து கதாநாயகி கதறி துடிப்பார். இதனை மிஞ்சும் அளவுக்கு ஒரு கொடூரம் உண்மையில் அரங்கேறி இருக்கிறது. அக்கா தம்பி என்று பழகி வந்த இது மிருகங்களில் 3 குழந்தைகள் மற்றும் கணவரை அனாதையாக நிறுத்திய உண்மை சம்பவம் தான் இது. சமீப காலமாக சட்டவிரோத உறவுகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு புறநகரில் உள்ள அனேகல் பசவனபுரா கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்ப...