சுவரில் வந்த திடீர் துர்நாற்றம்.. போலீஸை திக்குமுக்காட வைத்த கொடூரம்..! குலை நடுங்க வைக்கும் தகவல்!

பெங்களூரு, செப்டம்பர் 24, 2025 : கங்கேரி சாட்டிலைட் டவுனின் அமைதியான புறநகர்த்தெருக்களில், மே 7, 2017 அன்று ஒரு வழக்கமான ஞாயிற்றுகிழமை. ஆனால், அன்று மாறுபட்டது.

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏது ஓய்வு நாள்.. என்றாலும் ஞாயிற்றுக்கிழமை Vibe-ல் இருந்தனர் அதிகாரிகள்.. அதே சமயம் வேலைக்கும் தயாராக இருந்தனர். திடீரென ஒரு போன் கால் வந்தது – 35 வயது நவீன் என்ற இளைஞன். 

" சார்.. வணக்கம் சார்.. எனது வாடகை வீட்டில் இருந்து தாங்க முடியாத ஒரு துர்நாற்றம் வருகிறது. என்ன நடந்திருக்கிறது என்று தெரியவில்லை. சந்தேகமா இருக்கு.. உடனடியாக வந்து பார்க்க முடியுமா?" என்று அவர் பதற்றத்துடன் கூவினார்.

போலீஸ் அதிகாரிகள் முதலில் சிரித்துக்கொண்டே "வீட்டில் துர்நாற்றமா?" எலி எதாச்சும் செத்து கிடக்கும் பாத்திங்களா..? என்று கூறினார்கள். ஆனால் நவீனின் குரலில் இருந்த வழக்கத்திற்கு மாறான பதற்றம் அவர்களை அசைய செய்தது.

ட்ரைவர் வண்டிய எடுங்க என்று அவர்கள் உடனடியாக வாகனம் ஏறி, கங்கேரி போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினர். வீட்டை அணுகியதும், வெளியில் காத்திருந்த நவீன் கை காட்டி.. சார் இங்கே.. என்று உள்ளே அழைத்தார். கதவு திறந்ததும், அந்த துர்நாற்றம் அவர்களையும் தாக்கியது.

என்ன கொடூரம் இது..? வயிற்றை புரட்டுது.. என்று சொல்லி முடிக்கும் முன்பே உடன் வந்திருந்த ஒரு இளம் பெண் போலிஸ் வெளியே சென்று வாந்தி எடுத்தார். அந்த அளவுக்கு கொடூரமான துர்நாற்றம்.

சார்.. இது பிண வாடை சார்.. என்று ஒரு ஒரு போலீஸ் கூற.. அறையை சோதித்தனர். எங்கும் எதுவும் இல்லை. அறையே சுத்தமாக இருக்கிறது. ஆனால் அந்த வாசனை எந்த பகுதியில் இருந்து அதிகமாக வருகிறது என மூக்கை வைத்து உறிஞ்சபடியே அறைக்குள் நகர்ந்தனர்.

சிக்கியது ஒரு மூடியிருந்த ஒரு கப்போர்ட். அதன் அருகில் சென்றதும் வாசனை இன்னும் கொடூரமாக மாறியது. கதவை திறந்தனர். ஆனால், உள்ளே எதுவும் இல்லை.

ஆனால், உள்ளே இருந்த சுவர். அதை சமீபத்தில் தான் சிமெண்ட் பூசி மூடியுள்ளனர் என்பது தெரிந்தது. உடனடியாக கருவிகளை எடுத்து, அவர்கள் சிமெண்ட்டை உடைத்தனர்.

உள்ளே... அறையும் குறையும் சிமெண்ட் பூசப்பட்ட, புழுக்கள் நிறைந்து சிதைந்து போயுள்ள ஒரு உடல். 69 வயதான சாந்தகுமாரி – ஒரு பாட்டியின் உடல், கண்டிப்பா ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும் சார் என்ற குரல். அந்த காட்சி போலீஸை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடலை அகற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

நவீனிடம் விசாரணை தொடங்கியபோது, முதல் தடயம் கிடைத்தது: வீட்டில் கிடைத்த ஒரு செல் போன். அது இறந்தவருக்கு சொந்தமானது. சார்ஜ் செய்து சுவிட்ச் ஆன் செய்ததும், அதில் 21 வயது சஞ்சய் என்ற ஆரோநாட்டிகல் இன்ஜினியரிங் மாணவரின் விவரங்கள்.

சஞ்சய் தான் கில்லரா? போலீஸ் உடனடியாக அவரை தேடினர். கிடகல் பகுதியில் அவர் கிடைத்தார். ஆனால் அவர் மறுத்தார்: "நான் கொலை செய்யவில்லை. ஆனால் கொலையாளிகளை அறிவேன்." அவர் போலீஸை மெஜஸ்டிக் லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு யாரும் இல்லை. "அவர்கள் வட இந்தியாவுக்கு தப்பி ஓடியிருப்பார்கள்," என்று சஞ்சய் சொன்னார்.

விசாரணை சூழ்ந்து கொண்டிருந்தது. வீட்டு உரிமையாளர் நவீன் விவரித்தார்: சஞ்சயும் அவரது தாய் சசிகலாவும் 2016 ஆகஸ்ட் முதல் வாடகைக்கு இருந்தனர். 2017 பிப்ரவரி 2 அன்று திடீரென வீட்டை காலி செய்து சென்றனர். "வாசனை தாங்கவில்லை என்று சொல்லி அட்வான்ஸ் பணத்தை திரும்பக் கேட்டனர்," என்று அவர் கூறினார்.

போலீஸ் அவர்களின் தொடர்பு எண்களை தொடர்ந்து, வட இந்தியாவில் எச்சரிக்கை அனுப்பினர். ஆனால் எந்தத் தடயமும் இல்லை. ஒரு கட்டத்தில், கேஸ் குப்பைக்கு சென்று விட்டது. கங்கேரி போலீஸ் அதை மறந்து, வேறு வேலைகளில் மூழ்கினர்.நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் ஓடின.

2022ல், ஐந்து ஆண்டுகள் கழித்து, போலீஸ் பழைய கோப்புகளை திரும்பப் பார்த்தனர். சஞ்சயின் விவரங்களை மீண்டும் சரிபார்த்தனர்: ஆதார், வங்கி கணக்கு, ஏ.டி.எம் பரிவர்த்தனைகள். திடீரென ஒரு தடயம் – மகாராஷ்டிராவின் கொல்காப்பூரில், சஞ்சய் தனது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கு திறந்திருந்தான்.

"இனி யாரும் நம்மைப் பிடிக்க மாட்டார்கள்," என்ற நம்பிக்கையில் அவன் செய்த தவறு. போலீஸ் உடனடியாக அங்கு புறப்பட்டனர். கொல்காப்பூர் லாட்ஜில் சஞ்சயையும் சசிகலாவும் கண்டுபிடித்தனர். அவர்கள் அங்கு ஹோட்டல் ஊழியர்களாக வேலை செய்து, அடையாளத்தை மறைத்திருந்தனர்.

விசாரணையில் வெளிப்பட்ட உண்மை அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது. ஆகஸ்ட் 17, 2016. சஞ்சய், தனது 69 வயது பாட்டி சாந்தகுமாரிக்காக ஹோட்டலில் கோபி மஞ்சூரியன் பார்சல் வாங்கி வந்தான். ஆனால் பாட்டி கோபத்தில்: "இன்று நமது நிலைமையில் இது தேவையா? காசை வீணாக்காத!" என்று கத்தினார்.

சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த அவர்களது குடும்பம், ஒரு காலத்தில் செல்வந்தராக இருந்தது. ஆனால் சஞ்சயின் தந்தை-தாய் விவாகரத்துக்குப் பின், பண நெருக்கடி. பாட்டியின் வருத்தம், பேரனின் இளைஞன் கோபம் – அது விவாதமாகி, வாக்குவாதமாகி, வன்மமாக மாறியது.சஞ்சய் சமையலறையில் இருந்து தோசைக்கல்லை எடுத்து, பாட்டியின் தலையில் பலமாக அடித்தான். இரத்தம் கொட்டியது.

சாந்தகுமாரி போராடினாலும், 70 வயதில் அது சாத்தியமில்லை. அவள் மயக்கத்தில் உயிரிழந்தாள். அந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த சசிகலா, அம்மாவின் உடலைப் பார்த்து அதிர்ந்தாள். ஆனால் மகனின் கையில் இரத்தம் தோய்ந்த தோசைக்கல் – அது அவளது இரத்தத்தை கொதிக்க வைத்தது. "ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லலாமா?" என்று யோசித்தாள். ஆனால் "போலீஸ் கேஸ் ஆகிவிட்டால் என்ன?" என்ற பயம் வென்றது.

அது தான் தங்கள் வாழ்க்கையின் முடிவு.உடலை மறைக்கும் பிளான் தொடங்கியது. முதலில் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று எரிப்பது என்று சஞ்சய் நினைத்தான். நண்பருக்கு உதவிக் கேட்டான் – ஆனால் யாரும் வரவில்லை. அப்போது நந்தீஸ் என்ற நண்பருக்கு தொடர்பு கொண்டான். நந்தீஸ் வந்தான், ஆனால் அப்போது பிளான் மாறியது: உடலை துண்டு துண்டாகச் செய்து, ப்ளூ கலர் டிரமில் வைத்து டிஸ்போஸ் செய்வது. ஆனால் டிரம் சிறியதாக இருந்தது.

இறுதியாக, அலமாரியின் பின் உடலைப் புதைத்தனர். சுவரைத் தோண்டி, உடலை வைத்து, உப்பு, சுத்தி, அரை சிமெண்ட் போட்டு மூடினர். வாசனை வராமல் இருக்க, ஸ்ப்ரேக்கள், டேப் – எல்லாவற்றையும் சோதித்தனர். ரெட் பெயிண்ட் தடை போட்டு மறைத்தனர்.ஆனால் வாசனை நின்றது இல்லை.

அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, "பாட்டியும் அம்மாவும் ஊருக்கு போயிருக்கிறோம்," என்று பொய் சொன்னனர். மாசம் கணக்கில் தாங்க முடியவில்லை. பிப்ரவரி 2017ல் வீட்டை காலி செய்தனர்.

நவீன் மே மாதம் வந்தபோது வாசனை கண்டார். போலீஸ் சஞ்சயின் போனில் இருந்து ஆப்ஸ், பெர்ஃப்யூம் பாட்டில்கள் மூலம் உறுதிப்படுத்தினர். DNA டெஸ்ட் சாந்தகுமாரியின் உடல் என்பதை உறுதி செய்தது.

2022ல் அரெஸ்ட். சஞ்சயும் சசிகலாவும் ஜெயிலில். மோட்டிவ்? ஒரு கோபி மஞ்சூரியன் பார்சல். ஆனால் வதந்திகள்: சொத்து பிரச்சினைக்காகவா? கோர்ட்டில் உண்மை வெளியாகும். இந்தக் கேஸ் ஒரு பாடம்: கோபம் ஒரு நொடியில் வாழ்க்கையை அழிக்கும்.

தவறை மறைக்க முயல்வது மிகப்பெரிய பாவத்தைத் தரும். நேர்மையாக எதிர்கொள்ளுங்கள் – காலம் ஒருநாள் உண்மையை வெளிச்சம் போடும்.

Summary : In Bengaluru's Gangagiri suburb, a foul smell in a rental home led police in 2017 to a cemented wardrobe hiding 69-year-old Shanthakumari's decomposed body. Her 21-year-old grandson Sanjay killed her in a rage over a coffee Manchurian parcel during a family argument. Mother Sasikala aided in concealment; they fled to Maharashtra and were arrested in 2022 after five years.