வில்லக்கோட்டை கிராமம், சேலம் மாவட்டத்தின் இதயத்தில் அமைந்த சிறிய குடும்பங்கள் தொகுதி. செட்டிக்கோட்டைக்கு அருகில், பசுமையான வயல்களால் சூழப்பட்ட இந்த ஊர், பொதுவாக அமைதியானது.ஆனால், சம்பவம் நடந்த அன்று, அந்த அமைதி உடைந்தது.
குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு கிரைம் கதை. பெயர் மற்றும் ஊர் மாற்றப்பட்டுள்ளது.
வானம் மழையைப் பொழிந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த வீட்டில் பாய்ந்ததோ இரத்த வெள்ளம். வடிவம்மாள், அந்த வீட்டின் தூண். அவருக்கு 55 வயது. அவருடைய மகள் சாருமதி, வயது 32.

சாருமதி ஊரே மயங்கும் பேரழகுக்கு சொந்தக்காரி, தண்ணிக்குடம் எடுத்து சாலையில் நடந்து வந்தால் ததும்புவது தண்ணீர் மட்டுமல்ல.. அவளது அழகுகளும் தான்.. அந்த பகுதி இளசுகளின் பார்வை முழுதும் அழகி சாருமதி மீது தான் இருக்கும். அந்த அளவுக்கு பேரழகு. பார்பதற்கு புன்னகையரசி சினேகா போல முகம் மற்றும் உடல்வாகு.
சம்பவம் நடந்த 03-11-2024 அன்று அவள் நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்தாள். அவளுடைய கணவர் மலேசியாவில் வேலைக்காகப் பயணித்திருந்தான்.வீட்டில் மூன்று பேர் மட்டுமே: வடிவம்மாள், சாருமதி, மற்றும் சாருமதியின் பன்னிரண்டு வயது மகன்இளவரசன்.
சம்பவம் நடந்த அன்று காலை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் பதறினர். வீட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே, தரையில் ரத்தம் சிந்தி, மூன்று உடல்கள். சாருமதி, அவள் வயிற்றில் உயிருள்ள குழந்தையுடன், பிரேதமாக கிடந்தால். அவள் முகத்தில் பயம் மட்டுமே தெரிந்தது. பயத்துடனே மரணமடைந்திருக்கிறாள்.
வடிவம்மாள், பலத்த காயங்களுடன், மூச்சுத்திணறிய படி வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். அவளை அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பினர், ஆனால் அவளும் அடுத்த சில மணி நேரத்தில் உயிர் துறந்தாள்.
இளரசன் மட்டும், அவன் சிறிய உடலில் பெரும் போராட்டத்துடன், உயிர் பிழைத்தான். அவன் கண்களில், அந்த இரவின் நிழல் இன்றும் நிழலிடுகிறது.போலீசார் வந்தனர். வீடு தேடப்பட்டது.
146 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் – எல்லாம் மறைந்துவிட்டன. கொள்ளை தான் காரணம் என்று தோன்றியது. ஆனால் யார்? கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. தடயங்கள் சிதறி கிடந்தன. தனிப்படை அமைக்கப்பட்டது.
ஊரே கொந்தளித்தது. "நீங்கள் பிடிக்காதீர்கள் என்றால், நாங்கள் பிடிப்போம்!" என்று கிராம மக்கள் வெடித்தனர். அந்த போராட்டத்தில், பக்கத்து வீட்டில் வசிப்பவரும், சாருமதியின் நண்பருமான தினேஷ் (எ) தீனா காவல்துறை முன்னால் நின்று கோபமாக கத்தினான். அழுதான்.. என்னங்க இது அநியாயமா இருக்கு..?. "இந்த கொலையாளிகளை விடவே கூடாது!" என்று அவன் கலங்கிய குரலில் சொன்னான்.
ஆனால் உண்மை என்ன என்பது அந்த இருட்டிற்கு தான் தெரியும். போலீசும் விசாரணை தொடங்கியது.
2021 ஜூலை மாதம் முன்பு வரை சாருமதி பேரழகி தான். அவளுடைய வாழ்க்கையும் பேரழகாக இருந்தது. ஆனால்,2021 ஜூலை மாதத்திற்கு பின்பு அவளது வாழ்க்கை, அழகையும், அமைதியையும் இழந்தது.
மகனுக்கு 10 வயது.. அவள் கணவர் வெளிநாட்டில் இருக்க.. வீட்டு வேலையை முடித்து விட்டு. தொலைக்காட்சியை பார்க்கும் சாருமதி.. அதில் காட்டும் ரொமான்ஸ், சீண்டல் காட்சிகளை பார்க்கும் போதெல்லாம்.. அவளுக்குள் ஆசை ஊற்று பெருக்கெடுத்தது. தனிமை அவளை வாட்டியது.
பக்கத்து வீட்டு நண்பன் தீனா, நிலம் கைமாற்றி விடுவது, வீடு வாடகைக்கு ஆள் பிடித்து கொடுப்பது போன்ற கமிஷன் சம்பந்தப்பட்ட வேளையில் ஈடுபட்டு சம்பாதிப்பது, காலை, மாலை இருவேளையும் ஜிம்முக்கு சென்று உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டு எளிய வாழ்க்கை நடத்துபவன். ஒரு பிரச்சனையில் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறான்.
என்னதான் தீனா சாருமதியுடன் தோழனாக பழகினாலும்.. அவனுக்கு சாருமதியின் அழகின் மீது கொள்ளை ஆசை. ஊரில் உள்ள இளசுகள் ஆசைப்படும் போது.. பக்கத்துக்கு வீட்டிலேயே, சாருமதிக்கு நண்பனாக உள்ள தீனாவுக்கு ஆசை வராதா..?
தீராத உடல் பசியில் இருந்த சாருமதி, தீனாவுக்கு தன் மேல் ஒரு பார்வை இருக்கிறது என்பதை உணர்ந்தாள். தீனா ஒரு நிமிஷம் இது என்னன்னு பாருங்க.. அந்த மருந்தை கொஞ்சம் வாகிட்டு வரீங்களா..? என்று அவனுடன் நெருக்கமாக தொடங்கினாள்.
அதே போல ஒரு முறை தீனாவை அழைத்த சாருமதி. உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்.. தயக்கமா இருக்கு என தரையை பார்த்தால். தீனாவோ.. என்கிட்டே கேக்குறதுக்கு என்ன கேளுங்க.. என்று சொல்ல.. எனக்கு நாப்கின் வாங்கிட்டு வந்து தருவீங்களா..? கேக்கவே கூச்சமா இருக்கு.. என கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்டால் சாருமதி.
தீணாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. என்ன..? என்கிட்ட போய் இதை வாங்கிட்டு வர சொல்றீங்க..? எனக்கு வெக்கமா இருக்குங்க.. என்று தயங்கினான் தீனா. இதுல என்ன வெக்கம்.. உங்களோட பொண்டாட்டியா இருந்தா வாங்கிட்டு வந்து கொடுக்க மாட்டீங்களா..? என்று ஹஸ்கி குரலில் சிணுங்கினாள் சாருமதி.
அடுத்த நிமிடமே.. தீனாவின் கையில் பணத்தை திணித்து வாங்கிட்டு வந்து குடுடா.. எனக்கு இதை கூட பண்ண மாட்டியா.. அவளின் ஆசை வார்த்தைகளில் மெழுகாய் உருகினான் தீனா.
சில நிமிடங்களில் சிட்டாக பறந்து நாப்கினுடன் வந்து நின்றான் தீனா. வெக்கத்துடன் பெற்றுக்கொண்ட சாருமதி. எனக்கு பீரியட்ஸ் எதுவும் ஆகல. சும்மா தான் உன்னை டெஸ்ட் பண்ணேன். இதுக்கு ஹெல்ப் பன்றியான்னு பாக்குறதுக்கு.. என்று தன்னுடைய காதல் ரசம் தேய்த்த வார்த்தைகளை முனகினாள்.
என்னை எதுக்கு டெஸ்ட் பன்றீங்க..? என தீனா கேட்க.. சற்றும் எதிர்பாராத விதமாக தீனாவை சக்கென இறுக்கி அனைத்துக்கொண்டாள் சாருமதி. மிரண்டு போனான் தீனா.
ஐயோ என்னங்க பண்றீங்க.. என்னங்க இதெல்லாம் என பேச்சுக்கு கூறினானே தவிர.. அவளின் அரவணைப்பை ஏற்றுக்கொண்டது போல அவனும் சாருமதியை கட்டிப்பிடித்தான். அவ்வளவு தான், அது கள்ளத்தொடர்பாக மாறியது.
திருமண பந்தத்தை மீறிய உறவு. இரவுகளில், அந்த வீட்டின் பின்வாசலில் சந்திப்புகள். சாருமதி, அந்த உறவில் சிக்கிக் கொண்டாள். தீனா, அவளின் ரகசியங்களை ஒவ்வொன்றாக அறிந்தான்.
இதற்கிடையே, சாருமதியின் அக்கா மகளுக்கு திருமணம். 150 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் – அவை பாதுகாப்பாக இருக்க, வேலுமதியின் வீட்டில் வைக்கப்பட்டன. இதுவும், தீனாவுக்கு தெரிந்தது.
"இது என் வாய்ப்பு," என்று அவன் மனதில் யோசித்தான். ஆசை, பேராசையாக மாறியது. அவன் நான்கு தோழர்களை அழைத்தான். "இந்த நகைகளை எடுத்தால், நமக்கு ஒரு கோடி வருமானம்," என்று அவன் சொன்னான். ஆனால் அது எளிதல்ல. சாட்சிகள் இருக்கலாம். எனவே, ஆட்களை கொலை பண்ணிட்டா தான் தப்பிப்போம்.
ஆளுக்கு 20 லட்சம் கிடைக்கும். என ஒகே வா.. அன்று இரவு, தீனா திட்டமிட்டான். ஆனால், இதில் தனக்கு தொடர்பு இருக்கிறது என வெளியே தெரிந்து விடக்கூடாது என முன் கூட்டியே திட்டமிட்டான் தீனா.
தனக்கு தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரியின் காரை கடனாக வாங்கிக்கொண்டு திருச்சிக்குப் போனான். திட்டமிட்டமடி, தீனாவின் நான்கு தோழர்கள் வந்தனர்.
கதவை தட்டினர். தீனா தான் வந்துள்ளான் என கதவை திறந்த சாருமதிக்கு, அதிர்ச்சி.. பயம்... "தீனா... இங்க வாங்க..?" என்று அவள் கத்தினால். ஆனால் அது கடைசி வார்த்தை.
கத்தி, கொடுவாள், உருட்டு கட்டை – கொடூரமான தாக்குதல். வடிவம்மாள் எழுந்து எதிர்த்தாள். "அவளை விடுங்க டா!" என்று அவள் போராடினாள். ஆனால் அவர்களின் கைகள் இரக்கமின்றி இருவரையும் வெட்டி சாய்த்தன.
இளரசன், அறைக்குள் மறைந்து, அழுதான். அவர்கள் அவனை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அவன் கேட்டது – அவளின் அம்மா மற்றும் பாட்டியின்மரண ஓலம் மற்றும் கூக்குரலை.
நகைகள், பொருட்கள் எல்லாம் ஒன்று விடாமல் எடுக்கப்பட்டன. அடுத்த நாள், தீனா திரும்பினான். போலீஸ் வந்தபோது, அவன் அழுதான். என்னங்க இது அநியாயமா இருக்கு..?. "இந்த கொலையாளிகளை விடவே கூடாது!" என்று அவன் கலங்கிய குரலில் சொன்னான்.
ஆனால் போலீஸ் தனிப்படை, 55 நாட்களாகத் தேடியது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் இருந்து ஒரே ஒரு மோதிரம் மட்டும் பிரபல வங்கியில் அடகு வைக்கப்பட்டது. அலறியது காவல்துறையின் தொலைபேசி.
யார் அடமானம் வைத்தது..? போலீஸ் கையில் விபரங்கள் கிடைத்தன. அடுத்த இரண்டு மணி நேரத்தில், தீனா மற்றும் அவரது நான்கு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இது போன்ற, கிரைம், திரில்லர் கதைகளை படிக்க கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலை பின்தொடருங்கள்.
Crime Tamizhakam... participants Summary : In Salem's serene Villakottai village, pregnant beauty Sarumathi and mother Vadivammal were brutally murdered for 146 sovereigns of gold, leaving son Ilavarasan traumatized but alive. Robbery masked betrayal: neighbor Theena, her secret lover, plotted with four accomplices to steal family jewels, leading to the savage attack. Arrested after pawning a ring. (Based on true events; names changed.)

