வெளிநாட்டில் கணவன்.. ஆணுறை வேண்டாம் என கூறி மனைவி அனுப்பிய வாட்சப் ஆடியோ.. வெளியான கொடூர உண்மை..

கள்ளக்குறிச்சி, அக்டோபர் 24: வெளிநாட்டில் உழைத்து குடும்ப கடனைத் தீர்க்க முயன்ற கணவரின் 16 லட்சம் ரூபாய் சம்பாத்தியத்தை தனது கள்ளக்காதலனுக்கு தங்கச் சங்கிலி வாங்கியதாக மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தவறுதலாக அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் ஆடியோவால் வெளிப்பட்ட இந்தச் சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமைப் பாதுகாப்புக்காக பெயர்கள் மற்றும் ஊர் மாற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் வேலைக்காக கடந்த எட்டு மாதங்களாகத் தங்கியுள்ள வேலுச்சாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்ப கடன் பிரச்சனையைத் தீர்க்க, வெயிலிலும் மழையிலும் உழைத்து கடந்த எட்டு மாதத்தில் 16 லட்சம் ரூபாயைத் தனது மனைவி ருக்மணிக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், வீட்டில் நீண்ட நேரம் தனிமையில் இருந்து வந்த ருக்மணி தனது கல்லூரி நண்பர் வினோத் என்பவருடன் தொலைபேசி மூலம் பேசி வந்தார் ருக்மணி, ஆரம்பத்தில் நட்பாக பேசி பழகிய இருவரும் பின்னர் நேரில் சந்தித்து தனிமையில் உறவை வலுப்படுத்தினார்.

சம்பவ நாளன்று, வீட்டுக்கு வருவதாகக் கூறிய வினோதிடம் "இன்னைக்கு ஆணுறை எல்லாம் வேண்டாம், நாம் திருமணம் செய்துகொள்ள போகிறோமே" என்று கூறி அந்த ஆடியோவை, தவறுதலாக தனது கணவருக்கு அனுப்பியது தான் இந்த விஷயத்தின் தொடக்கப் புள்ளி.

மனைவி ருக்மணி வாட்சப்பில் இருந்து ஆணுறை எல்லாம் வேண்டாம் என வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளதை கண்டு அதிர்ந்தார் கணவன். இதனால் ருக்மணி வசமாகச் சிக்கினார். இதைத் தொடர்ந்து, வேலுச்சாமி தனது குடும்பத்தினரிடமும் ருக்மணியின் பெற்றோரிடமும் தகவலைத் தெரிவித்தார்.

"கடன் நெருக்கடியில் நான் வெளிநாட்டில் உழைத்து அனுப்பிய 16 லட்சம் என்ன ஆனதுன்னு பாருங்க.. ஒரு வருஷம் காண்ட்ராக்டு இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் என்னை விடுவாங்க.. இதுவரைக்கும் அனுப்பிய பணம் எல்லாம் ருக்மணியின் கணக்கில் தான் இருக்கு.. கொஞ்சம் அந்த பணம் எல்லாம் என்ன ஆச்சுன்னு பாருங்க என்று பதறியபடி தனது பெற்றோர்களிடம் கூறினார் வேலுச்சாமி.

ருக்மணியை வங்கிக்கு அழைத்துச் சென்று அவர் வங்கி கணக்கில் இருந்து 11 லட்சம் ரூபாயைப் பணமாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினர். மீதமுள்ள 5 லட்சத்தைப் பற்றிய கேள்விக்கு, ருக்மணி சாக்கு போக்கு சொல்லி வந்தார்.

குடும்பத்தினர் மிரட்டி கேட்டதில், "வினோத்திற்கு ஏழு பவுன் தங்கச் சங்கிலி வாங்கினேன்" என்று பகீர் வாக்குமூலம் அளித்தார்.

(கொடுமைய பாத்திங்களா மக்களே.. வேர்வை சிந்துறது ஒருத்தன்.. தங்க சங்கிலி போட்டுக்கிட்டு மினுக்குறது இன்னொருத்தன்.. கலிகாலம்..)

இதைத் தொடர்ந்து, வேலுச்சாமியின் பெற்றோர்கள் வினோத் மீது புகார் கொடுத்தனர். விசாரணையில் வினோத் அந்தத் தங்கச் சங்கிலியை வாங்கியது உண்மை எனத் தெரியவந்தது.

இதன் பிறகு, வினோத் அந்தத் தங்கச்சங்கிலியை ருக்மணியிடம் திருப்பிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட வேலுச்சாமியின் பெற்றோர்கள், "மகன் திரும்பிய பிறகு விவாகரத்து நடவடிக்கைகளை எடுக்கிறோம். உங்கள் மகளை அழைத்துச் செல்லுங்கள்" என்று ருக்மணியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கள்ள காதலன் வினோத், ருக்மணி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். "நான் ருக்மணியை காதலிக்கவில்லை, திருமணம் செய்யவும் நினைக்கவில்லை. அவள் தான் என்னை முதலில் அழைத்தால்.. நான் நட்பு ரீதியில் தான் அவங்க வீட்டுக்கு சென்றேன்.. ஆனால், திடீரென என்னை அறைக்குள் அழைத்து ஆடைகளை கழட்டி நின்று.. உல்லாசமாக இருக்க அழைத்தால்.. நான் தவறு செய்துவிட்டேன்.. என்னுடன் தனிமையில் இருந்த காட்சிகளை வைத்து பிளாக்மெயில் செய்து, திருமணம் செய்து கொள்ள சொல்லி மிரட்டுகிறார்" என்று அவர் புகார் கூறியுள்ளார்.

(கையில் இருந்த கலாக்காயை விட்டு.. மரத்தில் இருந்த பலாக்காய்க்கு ஆசைப்பட்ட ருக்மணியின் தலையில் பலாக்காய் விழுந்த தருணம் )

இதைக் கேட்டு அதிர்ந்த ருக்மணி, தனது மாமனார்-மாமியாரின் காலில் விழுந்து "இது எனது பெரிய தவறு, இனி இப்படி நடக்காது.. என்னை உங்க வீட்டுக்கு கூட்டிகிட்டுபோங்க.. என்று மன்னிப்பு கோரினார்.

ஆனால், வேலுச்சாமியின் பெற்றோர்கள் ருக்மணியை ஏற்க தயாராக இல்லை. இன்னைக்கு நாம தங்குறதுக்கும், திங்குறதுக்கும் காரணம் வேலுச்சாமி. வீடு கட்ட வாங்குன கடனை அடைக்க வெளிநாட்டில் கஷ்டப்படுறான். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்துட்டு போனான்.. உன்கிட்ட இதுவரைக்கும் கோவப்பட்டு பேசியிருப்பனா என் புள்ள.. ஆனால் நீ இப்படி ஒரு துரோகத்தை அவனுக்கு செஞ்சிருக்க.. அவன் காசை எடுத்து உன்னோட கள்ள புருஷனுக்கு செயின் செஞ்சி போட்டு இருக்க.. நீயெல்லாம், மனுஷ ஜென்மமே கிடையாது" என்று கொச்சையான வார்த்தைகளில் திட்டி, ருக்மணியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

மேலும், வினோத்தின் புகாரை விசாரித்த காவல்துறையினர் ருக்மணியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமூக ஊடகங்களிலும் விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனியுரிமைப் பாதுகாப்புக்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

விவாகரத்து மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ( சம்பவ விவரங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை. சட்டப்படி தனியுரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.)

Summary : In Kallakurichi, wife Rukmani accidentally sent a WhatsApp audio meant for lover Vinoth to husband Veluchamy, who remitted 16 lakhs from abroad to clear family debts. Exposed affair led to recovering 11 lakhs from her account; 5 lakhs bought a 7-sovereign gold chain for Vinoth, later returned. Police warned her amid blackmail claims; family initiates divorce.