விஜய் கட்சியின் சின்னம்..? அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்..? விஜய்க்கு ஆட்சியில் என்ன பங்கு? பரபரப்பு தகவல்கள்..!

சென்னை, அக்டோபர் 10 : தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த நிகழ்வுகள், 2026 சட்டமன்றத் தேர்தலின் வடிவத்தை முற்றிலும் மாற்றியுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது முதல், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி பேச்சுகள் வரை – இவை அனைத்தும் திமுக ஆட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

செப்டம்பர் 28 அன்று கரூரில் நடந்த த.வெ.க பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியலின் திசையை மாற்றியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முழு பொறுப்பு விஜயின் பிரச்சாரத் திட்டத்திற்கே உள்ளதாக ஒட்டுமொத்த பலியும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், கட்சி சாராத நடுநிலையான வாக்காளர்கள், தவெக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ.. அதே போல, ஆளும் கட்சிக்கும், காவல்துறைக்கும் சமமான பொறுப்பு உள்ளது என வாதிடுகின்றனர்.

த.வெ.க தொண்டர்கள் திமுக மற்றும் காவல் துறையை குற்றம் சாட்டினாலும், திமுகவினர் த.வெ.க-வை மட்டுமே சாட்டுகின்றனர். இதன் விளைவாக, நடுநிலை வாக்காளர்கள் இரு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது என நம்புகின்றனர்.

இந்நிலையில், சமீபத்திய வளர்ச்சிகள் த.வெ.கவை அதிமுக கூட்டணியில் இணைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி (இபிஎஸ்) தனது எழுச்சி பயணப் பிரச்சாரத்தின் போது, த.வெ.க கொடி பறந்த கூட்டத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், "கூட்டணிக்கு பிள்ளையார் சொல்லி போட்டுவிட்டோம்" என வெளிப்படையாகத் தெரிவித்தார். "கொடி பறக்கிறதா..? தெரிகிறதா?" என த.வெ.க கொடியைப் பார்த்து பேசிய இபிஎஸ், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அலையை ஏற்படுத்தினார்.

கரூர் சம்பவத்திற்கு முன் கூட்டணி பேச்சுக்கு இடமில்லை என சொல்லிக் கொண்டிருந்த த.வெ.க தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் இப்போது இபிஎஸ் பேச்சை சமூக வலைதளங்களில் ரசிக்கின்றனர்.

2026 தேர்தலில் விஜய் முதல்வராகலாம் என்பது லட்சியம், ஆனால், குறைந்தது எதிர்க்கட்சித் தலைவராவது நிச்சயம் என மிகப்பெரிய நம்பிக்கையுடன், கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, விஜய் மற்றும் இபிஎஸ் இடையே அரை மணி நேரம் தொலைபேசி உரையாடல் நடந்ததாகவும், கூட்டணி முடிவுகள் ஜனவரியில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின.

கரூர் விவகாரத்தில் விஜய் கைது செய்யப்பட்டால், த.வெ.க முன்னெடுக்கும் போராட்டங்களில் அதிமுக நிபந்தனையின்றி துணை நிற்கும், அதிமுக தொண்டர்கள் தவெக தொண்டர்களுக்கு ஆதரவாள களத்தில் நிற்பார்கள் என இபிஎஸ் பகிரங்கமாக உறுதியளித்தார்.

அடுத்த அதிரடியாக, த.வெ.க தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி சின்னங்களுக்கான விண்ணப்பத்தை அனுப்ப உள்ளது. தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பு விண்ணப்பிக்க வேண்டிய முறையின்படி, விசில், ஆட்டோ, கிரிக்கெட் பேட், உலக உருண்டை, மைக், இரட்டை யானை ஆகிய சின்னங்களைத் தேர்வு செய்துள்ளனர். இவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளன.

மறுபுறம், அதிமுக-த.வெ.க கூட்டணியில் விஜயின் கட்சிக்கு 45 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள். இதில் சென்னையில் மட்டும் 5 தொகுதிகள் த.வெ.க தரப்பில் கோரப்பட்டுள்ளது, இதுவும் பரிசீலனையில் உள்ளது.

இருப்பினும், 45 இடங்கள் ஒதுக்கீட்டை அதிமுக ஒப்புக்கொண்டாலும், சென்னை 5 இடங்கள் கட்சியினுள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், துணை முதல்வர் பதவி கோரிக்கையை த.வெ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இது ஏற்பட வாய்ப்புள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தரப்பில் இருந்து 40 இடங்கள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும், இது கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களின் எதிர்பார்ப்பாகவோ அல்லது யூகங்களாகவோ இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

கூட்டணி உறுதியானால், திமுக கூட்டணியில் இருக்கும் சில சிறு கட்சிகள் பிரிந்து இங்கு சேர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் ஜனவரி இறுதியில் தீர்மானமாகும் என்பதால், அடுத்த 100 நாட்கள் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும்.

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் எனும் மனநிலையில் விஜயைத் தள்ளியுள்ளதாக ஒட்டுமொத்த தமிழக மக்கள் பேசுகின்றனர். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி – என்ற சொல்லாடல் போல், தனியாகப் போட்டியிடுவேன் என சொல்லிக் கொண்டிருந்த விஜய், இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்தால் பெரும் திருப்புமுனை ஏற்படும் என்று மக்கள் நம்பிகின்றனர்.

ஒருவேளை தவெக தனித்து போட்டியிட்டால் அது திமுக மீண்டும் ஆட்சியமைப்பதற்கு அடித்தளமிட்டது போல ஆகிவிடும். திமுக வேட்பாளர்களின் பண பலத்திற்கு முன்னாள் தவெக வேட்பாளர்கள் நிற்பது கனவாக மாறிவிடும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்பட்ட அதே நிலை த.வெ.கவும் ஏற்படும் என்றும் யூகிக்கின்றனர்.

அதிமுக கூட்டணியில், 45 இடங்களில் போட்டியிட்டால் நிச்சயம் 40+ சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-விற்கு கிடைப்பார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் த.வெ.க-வின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுக்கும், மாவட்டம், வட்டம், பஞ்சாயத்து, வார்டு என தவெகவிற்கு அதிகாரமிக்க பொறுப்பாளர்கள் உருவாக்குவது த.வெ.கவிற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக மாறிவிடும் என்றும் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

என்ன நடக்கப் போகிறது அடுத்த 100 நாட்கள்..? என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, நம்முடைய 'தமிழகம்' தளத்தில் இணைந்திருங்கள். தமிழக அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும்!

Summary : Tamil Nadu politics heats up post Karur stampede killing 41, blamed on Vijay's TVK rally. TVK eyes AIADMK alliance, with EPS signaling support via phone talks and joint protests. TVK seeks 45 seats, 5 in Chennai, deputy CM post; symbols like whistle, auto filed with EC. January to decide alliance, potentially splitting DMK allies.