Posts

Showing posts with the label Deputy CM

திரும்பிய காங்கிரஸ்! தவெக கொடுத்த மெகா ஆஃபர்! தலை கீழாக மாறிய தமிழக அரசியல்!

Image
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பெரும் குழப்பமும், புதிய கூட்டணி வாய்ப்புகளும் எழுந்துள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய ஆஃபர் தற்போது அக்கட்சியின் முடிவெடுக்கும் செயல்முறையை பெரிதும் பாதித்துள்ளது. தவெக தரப்பில் இருந்து காங்கிரஸுக்கு 60 சட்டமன்றத் தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி மற்றும் நான்கு முக்கிய துறை இலாகாக்கள் (சில தகவல்களின்படி 3-6 அமைச்சர் பதவிகள் வரை) வழங்கத் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகவும், தேர்தல் களத்திலேயே வெளிப்படையாகவும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தவெக தரப்பு தயார்நிலையில் உள்ளது. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரப் பகிர்வு கோரிக்கை எழுந்துள்ளது. திமுக தரப்பு இதற்கு தயக்கம் காட்டுவதாகவும், அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு இதைவிட குறைவான தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக க...

விஜய் கட்சியின் சின்னம்..? அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்..? விஜய்க்கு ஆட்சியில் என்ன பங்கு? பரபரப்பு தகவல்கள்..!

Image
சென்னை, அக்டோபர் 10 : தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த நிகழ்வுகள், 2026 சட்டமன்றத் தேர்தலின் வடிவத்தை முற்றிலும் மாற்றியுள்ளன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது முதல், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி பேச்சுகள் வரை – இவை அனைத்தும் திமுக ஆட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. செப்டம்பர் 28 அன்று கரூரில் நடந்த த.வெ.க பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியலின் திசையை மாற்றியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முழு பொறுப்பு விஜயின் பிரச்சாரத் திட்டத்திற்கே உள்ளதாக ஒட்டுமொத்த பலியும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கட்சி சாராத நடுநிலையான வாக்காளர்கள், தவெக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ.. அதே போல, ஆளும் கட்சிக்கும், காவல்துறைக்கும் சமமான பொறுப்பு உள்ளது என வாதிடுகின்றனர். த.வெ.க தொண்டர்கள் திமுக மற்றும் காவல் துறையை குற்றம் சாட்டினாலும், திமுகவினர் த.வெ.க-வை மட்டுமே சாட்டுகின்றனர். இதன் விளைவாக, நடுநிலை வாக்காளர்கள் இரு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது என நம்புகின்றனர். இந்நிலையில...

“பொய் சொன்னால் காட்டிக் -கொடுக்கும் நவீன மெஷின்..” உதயநிதி கையில் கட்டியுள்ள இந்த பொருளின் விலை தெரியுமா..?

Image
என்னது பொய் சொன்னால் காட்டிக் கொடுக்கும் நவீன மிஷினா..? பொய் சொன்னால் காட்டிக் கொடுத்து விடும் என்றால் முதலில் சிக்குவது உதயநிதி ஸ்டாலினாகத்தான் இருக்கும். நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார் வந்தார். கட்சியில் சேர மாட்டேன் என்று சொன்னால் சேர்ந்தார். கட்சியில் எந்த பொறுப்பையும் ஏற்க மாட்டேன் கடைசி வரை தொண்டனாக மட்டுமே இருப்பேன் என்று சொன்னார். ஆனால் இளைஞர் அணி தலைவர் ஆனார். தேர்தலில் நிற்க மாட்டேன் என்று சொன்னார் தேர்தலில் நின்றார் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அமைச்சராக மாட்டேன் என்று சொன்னார் விளையாட்டு துறைக்கு அமைச்சரானார். துணை முதலமைச்சர் ஆக மாட்டேன் என்று சொன்னார் துணை முதலமைச்சர் ஆக இருக்கிறார். பிறகு எப்படி இது பொய் சொன்னால் காட்டிக் கொடுக்கும் மிஷின் என்று நீங்கள் கேட்கலாம்.? ஆம் பொய் சொன்னால் காட்டிக் கொடுத்து விடும். ஆனால், மக்களிடம் அல்ல. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உடல்நல பயிற்சியாளர் மற்றும் மருத்துவரிடம் ஒழுங்காக தூங்காமல் நல்லா தூங்கினேன், உடற்பயிற்சி செய்யாமல்.. உடற்பயிர்ச்சி செய்தேன் என பொய் சொன்னால் இவர் கையில் கட்டி உள்ள அந்த மிஷின் காட்டிக் கொடுத்து விடும். இத...