Posts

Showing posts with the label election symbols

விஜய் கட்சியின் சின்னம்..? அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்..? விஜய்க்கு ஆட்சியில் என்ன பங்கு? பரபரப்பு தகவல்கள்..!

Image
சென்னை, அக்டோபர் 10 : தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த நிகழ்வுகள், 2026 சட்டமன்றத் தேர்தலின் வடிவத்தை முற்றிலும் மாற்றியுள்ளன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது முதல், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி பேச்சுகள் வரை – இவை அனைத்தும் திமுக ஆட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. செப்டம்பர் 28 அன்று கரூரில் நடந்த த.வெ.க பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழக அரசியலின் திசையை மாற்றியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முழு பொறுப்பு விஜயின் பிரச்சாரத் திட்டத்திற்கே உள்ளதாக ஒட்டுமொத்த பலியும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கட்சி சாராத நடுநிலையான வாக்காளர்கள், தவெக எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ.. அதே போல, ஆளும் கட்சிக்கும், காவல்துறைக்கும் சமமான பொறுப்பு உள்ளது என வாதிடுகின்றனர். த.வெ.க தொண்டர்கள் திமுக மற்றும் காவல் துறையை குற்றம் சாட்டினாலும், திமுகவினர் த.வெ.க-வை மட்டுமே சாட்டுகின்றனர். இதன் விளைவாக, நடுநிலை வாக்காளர்கள் இரு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது என நம்புகின்றனர். இந்நிலையில...