குஜராத், அக்டோபர் 14 : குஜராத்தின் ஒரு பகுதியில் நடந்த சம்பவம், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட ஆண்டுகள் நட்புறவு கொண்ட இரு குடும்பங்களின் கூட்டில் நடந்த திருமணம், மாப்பிள்ளையின் அறியாமை காரணமாகவும், பாரம்பரிய கற்பீட்டுகளால் உண்டான சந்தேகத்தாலும், முதல் நாளிலேயே உடைந்து போயிற்று.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனையும், இரு தந்தைகளின் 30 ஆண்டுகள் பழக்கமான ஆழமான நட்பையும் கருத்தில் கொண்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன், குஜராத்தைச் சேர்ந்த 35 வயது அசோக் சிங்கிற்கும், கேரளாவைச் சேர்ந்த 27 வயது தீப்தி நாயருக்கும் இடையேயான திருமணம் நடைபெற்றது. அசோக் சிங், கிரானைட் நிறுவனத்தை நடத்தி வருபவர். தீப்தி நாயர், பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார். இரு குடும்பங்களும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவை.
அசோக் சிங்கின் தந்தை விரேந்தர் சிங் மற்றும் தீப்தி நாயரின் தந்தை கேசவன் நாயர் ஆகியோர், நீண்டகால நண்பர்கள். அசோக் சிங்குக்கு 8 ஆண்டுகளாக மணமகள் தேடல் தோல்வியுற்றிருந்ததால் துவண்டு போயிருந்தார் அவர், நண்பரின் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட கேசவன் நாயர், தனது மகளை அசோக்கிற்கு மருமகளாக அளித்தார்.
இத்தகைய ஆழமான நட்பின் அடிப்படையில் நடந்தது இந்த அழகான திருமணம்.திருமண நிகழ்ச்சிகள் சுமூகமாக நிறைவுற்றன. முதல் இரவு ஏற்பாடுகளும் வழக்கம்போல நடைபெற்றன. பாலும் பழமும் சகிதமாக புதுமணத் தம்பதியை அறைக்குள் அனுப்பினர்.
இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. உறவுக்குப் பின், பரஸ்பரம் பேச்சு கொண்டிருந்தனர். அப்போதுதான் அசோக் சிங், திடீரென "என் நண்பர்கள் சொன்னார்கள், முதல் இரவில் பெண்ணுக்கு ரத்தம் வரும் என்று. ஆனால் உனக்கு ஏன் வரவில்லை?" என்று கேட்டார்.
இது, பாரம்பரிய கற்பீட்டுகளால் உண்டான அறியாமையின் வெளிப்பாடாக இருந்தது. தீப்தி நாயர், தனது கணவரின் அறியாமையைப் புரிந்துகொண்டு, "எல்லோருக்கும் இப்படி நடக்காது. 20 வயதிற்குள் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அதிகம் நடக்கலாம். எனக்கு 27 வயது, அதனால் வரவில்லை" என்று விளக்கினார்.
ஆனால் அசோக் சிங், அடுத்தடுத்து கேள்விகளைத் தொடர்ந்தார். விவாதம் தீவிரமடைந்தபோது, "நீ படித்த கல்லூரியில் உள்ள பெண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் அப்படித்தான் போல" என்று கூறியதும், அதிர்ச்சியடைந்த தீப்தி, உடனடியாக ஆடைகளை அணிந்துகொண்டு அறையை விட்டு வெளியேறி, சத்தமிட்டார்.
வீட்டார்கள் பதறி அலட்டினர். விவரங்களை அறிந்த இரு குடும்பமும் அசோக் சிங்கை கடுமையாகத் திட்டினர். "இப்படி ஒரு மனைவியிடம் கேள்வி கேட்பது என்ன வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினர். அசோக் சிங்கின் தந்தை விரேந்தர் சிங், "இந்த வயதில் பெண் கொடுத்ததே பெரிய விஷயம். இப்படி கேட்க சொன்ன யாரு?" என்று கடுமையாக தாக்கவும் செய்தார்.
இரு குடும்பமும், "இது தவறான புரிதல் காரணமாக நடந்தது. பிரச்சனை இல்லை" என்று ஆறுதல் சொன்னது. ஆனால் தீப்தி, இதை எளிதாக விடவில்லை.அடுத்த நாள், தீப்தி நாயர், "எனது கற்பு குறித்து அவருக்கு சந்தேகம். அதை நிரூபிக்க வேண்டும்" என்று கூறி, அசோக் அறிந்த ஒரு பெண் மருத்துவரை அணுகினார்.
மருத்துவர், "இது சட்டத்திற்கு புறம்பானது. எல்லோருக்கும் இப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை" என்று எச்சரித்தார். ஆனால் அசோக் சிங்கின் வெறுப்பு மனப்பான்மையைப் பார்த்த தீப்தி, "முறையான அனுமதி பெற்றாவது சோதனை செய்யுங்கள்" என்று வற்புறுத்தினார். சட்ட நடைமுறைகள் நிறைவேறிய பின், சோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ சோதனையில், தீப்தி நாயரின் கன்னித்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அவர் கற்புடன் இருந்ததை ஆதாரங்களுடன் நிரூபித்தார் மருத்துவர். இது, தீப்தியின் கன்னித்தன்மையை மட்டுமல்ல,முதலிரவில் அசோக் நாயர் முழுமையாக இயங்கவில்லை என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியது.இதனால் அசோக் சிங், தலை குனிந்தான்.
"காம்பையும் கிள்ளாம, சுண்ணாம்பையும் தடவமாக, வெத்தலையும் போடாம.. வாய் செவக்கலன்னு சொன்னானாம், சும்மா கெடந்தவன்.." என்ற கிராமப்புற சொல்லாடலுக்கு உதாரணமானது அசோக் சிங்கின் நிலைமை.
இரு குடும்பமும் சோதனையைத் தடுக்க முயன்றது. ஆனால் தீப்தியின் நோக்கம், தனது கணவரை நம்ப வைப்பதே. சோதனை முடிவுகளுக்குப் பின், அசோக் சிங் மன்னிப்பு கேட்டார்.
ஆனால், தீப்தி, நான் என்னை நிரூபித்தது உங்களை நம்ப வைத்து தொடர்ந்து வாழ அல்ல. என்னை நோகடித்தது தவறு என உங்களுக்கு உணர்த்த மட்டுமே. உங்களுடன் தொடர்ந்து வாழ விரும்பவில்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இச்சம்பவம், சமூகத்தில் பெண்களின் கற்பு குறித்த பாரம்பரிய கற்பீட்டுகளின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது. நிபுணர்கள், "முதல் இரவு ரத்தம் வருவது போன்ற கற்பனைகள் அறிவியல் ரீதியாகத் தவறானவை. இது உளவியல் ரீதியாக பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரிக்கின்றனர்.
இரு குடும்பங்களின் நட்பு உடைக்கப்படாமல் இருக்க, தீப்தி நாயரின் முடிவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விவாகரத்து வழக்கு எதுவும் தாக்கல் செய்ததாக தெரியவில்லை. இது போன்ற கொடுமைகள் இன்னும் எவ்வளவு இடங்களில் நடக்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால் இச்சம்பவம் வெளியானது, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English : In Gujarat, a recent inter-state marriage between 35-year-old Ashok Singh and 27-year-old Deepthi Nair ended abruptly on their wedding night. Influenced by myths, Ashok questioned the absence of blood, accusing Deepthi of impurity. Shocked, she underwent a virginity test, proving her innocence. Despite his apology, Deepthi refused to continue the marriage, highlighting societal misconceptions.