46 வயது அம்மாவுக்கு தன் மகளின் 35 ட்யூசன் டீச்சர் மீது வந்த ஆசை.. அரங்கேறிய நினைத்து கூட பார்க்க முடியாத கொடூரம்..
லக்னோவின் பிஸியான சாலைகளுக்கு அருகில், கிரீன் சிட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தான் சூரிய பிரதாப் சிங். 35 வயதான அவன் ஒரு பிரபலமான டியூஷன் டீச்சர். ஸ்கூலில் ஆசிரியராகவும், வீட்டில் டியூஷன் சென்டர் நடத்தியும் நிறைய மாணவர்களை கவர்ந்தவன். ஹேண்ட்சம், நல்ல குணம், கெட்ட பழக்கம் இல்லை – இப்படி அவனைப் பற்றி ஊரே பேசும். அவன் வீட்டில் திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்பா நரேந்திர சிங் ஜாதகம் பார்த்து, புரோக்கர் வழியாக தேடினார். ஆனால் சூரியனுக்கு ஒரு சிறிய மாற்றம் வந்தது. அவன் டியூஷன் சென்டருக்கு ரத்னா என்ற 46 வயது பெண்மணி தன் இரு மகள்களை – 17 வயது அர்ச்சனாவையும், 14 வயது ஆராதனாவையும் – சேர்த்தாள். ரத்னா விதவை. கணவன் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவள் மகள்கள் சூரியை "சார்" என்று அழைத்து, நன்றாக படித்தார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் அவர்கள் அதிகமாக பேச ஆரம்பித்தார்கள். சூரியின் குடும்பம், பழக்கங்கள், திருமணம் ஏன் ஆகவில்லை என அனைத்தையும் கேட்டார்கள். ஒரு நாள் அர்ச்சனா நேரடியாகச் சொன்னாள்: "சார், எங்க அம்மாவுக்கு உங்க மேல கிரஷ் இருக்கு. அம்மாவை கல்யாணம் பண...