பெங்களூரு, அக்டோபர் 22 : கோவில் திருவிழாவில் தொடங்கிய காதல், கோபமாக மாறி கொலைக்குத் தள்ளியது. கடந்த சில மாதங்களுக்கு முன், கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், மூன்றாவது நபர் மூலம் ஹரிணிக்கு தலக்கட்டாபூரா சேர்ந்த 25 வயதான மென்பொறியாளர் யஷ் (Yash) உடன் அறிமுகம் ஏற்பட்டது.
இருவரும் தங்களது மொபைல் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். தொடக்கத்தில் நட்பாகத் தொடங்கிய உறவு, நாளடைவில் காதலாக மாறியது.யஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி, ஓயோ (Oyo) ஆப் மூலம் ஹோட்டல்களில் அறைகளைப் பதிவு செய்து, உல்லாசமான நேரங்களை அனுபவித்ததாகத் தெரிகிறது.

இந்த உறவு ஹரிணியின் கணவர் தாசே கௌடா (Thase Gowda) அறிந்ததும், அவர் மனைவியை கடுமையாகக் கண்டித்தார். ஹரிணியிடமிருந்து அவரது மொபைல் போனையும் பறித்து வைத்துக் கொண்டார்.
இதனால் யஷுடன் தொடர்பு கொள்ள முடியாத ஹரிணி, தனது கணவரிடம் மன்னிப்பு கோரி, "அந்த இளைஞருடன் பேச மாட்டேன்" என்று உறுதி அளித்தார். இதை நம்பிய தாசே கௌடா, மீண்டும் மொபைலைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால், காதலை மறக்க முடியாத ஹரிணி, யஷுடன் மீண்டும் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.
கொலை சம்பவம்: வாக்குவாதத்தால் ஆத்திரம்
இந்த நிலையில், கடந்த ஜூன் 1 அன்று, கெங்கேரி அருகே உள்ள பூர்ண பிரஜா லேஅவுட்டில் (Purna Praja Layout) தனியார் ஹோட்டலில் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர். யஷ் அங்கு அறையை முன்பதிவு செய்திருந்தார்.

ஹோட்டலில் இருவரும் உல்லாசமாக இருந்தனர். உடலுறவின் போது, " இது தான் கடைசி, இனிமேல் இந்த உறவை தொடர வேண்டாம். விளைவுகள் மோசமாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.. இன்றோடு முடித்துக்கொள்ளலாம்.." என்று ஹரிணி கூறியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த யஷ், அதெல்லாம் முடியாது. நீ என்னுடன் காலம் முழுதும் இப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இருவருக்கும் இடையேயான கடும் வாக்குவாதம், யஷை ஆத்திரமடையச் செய்தது.

அப்போது ஹரிணியை கடுமையாக தாக்கியுள்ளான் யஷ். வலிக்குது விடுடா என கெஞ்சியும் பயன் இல்லை. ஹரிணியின் தனியிருப்புகளில் கைகளால் அடித்து, குத்தி நரக வேதனையை கொடுத்துள்ளார். இறுதியாக, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஹரிணியை கண்முடித்தனமாக 17 முறை குத்தியுள்ளான் யஷ். இதில் ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்ததன் பின், யஷ் ஹோட்டலில் இருந்து தப்பி ஓடினார்.
ஹோட்டல் ஊழியர்களின் சந்தேகம்: போலீஸ் விசாரணைஅறை நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், கதவைத் திறந்து உள்ளே பார்த்தனர்.
அப்போது, இரத்தத்தில் நனைந்து கிடந்த ஹரிணியின் உடலைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஹரிணியின் உடலைக் கைப்பற்றி, விசாரணைத் தொடங்கினர்.

விசாரணையில், யஷ்தான் கொலையாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். தற்போது யஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம், திருமண உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் காதல் உறவுகளின் ஆபத்துகளைப் பற்றி சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், மேலும் விவரங்களைத் திரட்டி வருகின்றனர்.

Summary : In Bengaluru's Kengeri, 25-year-old software engineer Yash brutally stabbed his married lover Harini 17 times in a hotel room, killing her after a heated argument over ending their illicit affair. The romance sparked at a temple festival months ago, evolving from phone chats to secret meetups. Distraught hotel staff alerted police, leading to Yash's swift arrest. The tragedy shocks the community, highlighting dangers of extramarital relationships.
