சேலம், நவம்பர் 18: திருமணத்தை மீறிய உறவு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்து, கொலையாளியை 25 ஆண்டுகள் தலைமறைவாழ்க்கைக்குத் தள்ளிய அதிர்ச்சி சம்பவத்தில் அந்த கொலையாளி போலீசார் வசம் சிக்கினார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உம்பிலிக்கம்பட்டி பக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன் என்பவரின் மனைவி வேணி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2000-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி (தற்போது வயது 60) என்பவருடன் தகாத உறவில் இருந்தார்.

இதை அறிந்த கணவர் பூமிநாதன் கண்டித்ததும் வேணி உறவைத் துண்டித்துக்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த நல்லதம்பி தொடர்ந்து வேணியுடன் தகராறில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இருவரும் கடைசியாக உல்லாசமாக இருந்த போது, இனிமேல் இந்த பழக்கம் வேண்டாம், இதுவே கடைசி என தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார். வேணியின் விபரீத ஆசையை கண்டு அதிர்ந்து போன நல்லதம்பி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் உச்சத்தை அடைந்தபோது, கட்டையால் வேணியின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு உடனடியாக தப்பியோடினார். கொலை நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் நல்லதம்பியை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. ஆனால் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை, ரகசிய துப்பு துலக்கலில் இறங்கியது.

நல்லதம்பி ஆந்திராவில் ஒட்டல் தொழிலாளியாக வேலை பார்த்துவந்ததும், 4-5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் சொந்த ஊருக்கு வந்து உறவினர்களைப் பார்த்துவிட்டுச் செல்வதும் தெரியவந்தது. அந்த தகவலை வைத்து நேற்று உம்பிலிக்கம்பட்டிக்கு வந்த நல்லதம்பியை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவர் முழு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். “உறவைத் துண்டித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தேன். பிறகு ஆந்திராவுக்குத் தப்பினேன்” என்று கூறினார்.

ஒரு பெண்ணின் விபரீத ஆசை ஒரு குடும்பத்தை நாசமாக்கியது, அந்த பெண்ணை தீர்த்து கட்டிய ஒரு ஆண் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பி 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இந்த கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “எல்லோர் உள்ளும் ஒரு மறைமுக முகம் இருக்கிறது. சில சமயம் அது வெளியே வந்தால்… உலகமே அதிர்ந்துவிடும்” – இந்த வழக்கு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.



